ரூ. 74 லட்சம் மோசடி.. ஆபிஸை காலி செய்து தலைமறைவு.. பிக்பாஸ் ராபர்ட் மாஸ்டரின் தங்கை ஷோபா கைது

பிக்பாஸ் பிரபலமும் டான்ஸ் மாஸ்டருமான ராபர்ட் மாஸ்டரின் தங்கை பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் பிரபலமும் சினிமா நடன இயக்குநருமான ராபர்ட் மாஸ்டரின் தங்கை பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராபர்ட் மாஸ்டர் நடன இயக்குநராக இருந்தாலும் அவரை பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில்தான் பெரும்பாலானோருக்கு தெரியும். ரச்சிதாவிடம் அவ்வப்போது வம்பிழுத்துக் கொண்டே இருந்தார். மேலும் இவர் அழகன் படத்தில் மம்முட்டியின் மகனாக நடித்திருந்தார். போடா போடி படத்திற்காக விஜய் டிவியின் சிறந்த நடன இயக்குநருக்கான விருதை பெற்றுள்ளார்.

காதல் தேசம் படத்தில் வரும் கல்லூரி சாலை பாடல், லவ் டுடே படத்தில் வரும் என்ன அழகு எத்தனை அழகு எனும் பாடல், ஒன்ஸ் மோர் படத்தில் வந்த ஊட்டி மலை பியூட்டி உன் பேரு என்னம்மா, காலமெல்லாம் காதல் வாழ்க படத்தில் பாபிலோனா திராட்சை பழம் போல எனும் பாடல் உள்ளிட்டவைகளுக்கு நடன இயக்குநராக இருந்துள்ளார்.

 மூத்த சகோதரி

மூத்த சகோதரி

இவரது மூத்த சகோதரி அல்போன்ஸா. இவர் பல திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். ராபர்ட்டின் மற்றொரு சகோதரி ஷோபா வசந்த். இவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளாராம். சென்னை வளசரவாக்கத்தில் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்று தரும் நிறுவனம் ஒன்றை ஷோபா நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தின் மூலம் துபாய், கனடா , மலேசியா போன்ற நாடுகளில் வேலை வாங்கி தரப்படும் என விளம்பரம் செய்திருந்தார்.

ஷோபாவின் அலுவலகம்

ஷோபாவின் அலுவலகம்

இதை நம்பிய பலர் ஷோபாவின் அலுவலகத்தில் வெளிநாட்டில் வேலை பெற்று தருமாறு விண்ணப்பித்திருந்தனர். அவ்வாறு விண்ணப்பிக்கப்பட்டவர்களில் 17 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. அவர்களுக்கு பணிநியமன ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களிடம் ரூ 74 லட்சத்தை ஷோபா பெற்றதாக தெரிதிறது. இதனால் வெளிநாடு செல்ல தயாராக இருந்த போதுதான் ஷோபா நடத்திய நேர்காணல் போலியானது என தெரியவந்தது.

ஷோபா அளித்த பணி நியமன ஆணை

ஷோபா அளித்த பணி நியமன ஆணை

அத்துடன் ஷோபா அளித்த பணி நியமன ஆணையும் போலியானது என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த 17 பேரும் ஷோபாவின் அலுவலகத்திற்கு போய் முறையிட்டுள்ளனர். அதற்கு ஷோபா கவலைப்படாதீர்கள், நிச்சயம் உங்களுக்கு வேலை கிடைக்கும் என கூறினாராம்.

17 பேருக்கும் வேலை

17 பேருக்கும் வேலை

ஆனால் அவர் கூறியபடி அந்த 17 பேருக்கும் வேலை கிடைக்கவில்லை. இதையடுத்து மீண்டும் அந்த அலுவலகத்தில் ஷோபாவை பார்த்து வேலை குறித்து கேட்கலாம் என கருதி 17 பேரும் வளசரவாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது ஷோபா அந்த அலுவலகத்தை காலி செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது.

போக்குவரத்து காவல் துறை ஆணையர்

போக்குவரத்து காவல் துறை ஆணையர்

இதையடுத்து ஷோபா மீது பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ஷோபா மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரை தேடி வந்தனர். அது போல் ஷோபாவை போலீஸார் மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களும் வாட்ஸ் ஆப் குழு அமைத்து தேடி வந்தனர். அப்போதுதான் சென்னை முகப்பேர் பகுதியை அடுத்த நொளம்பூரில் ஷோபா புதிய அலுவலகத்தை தொடங்கி வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.

கேளம்பாக்கத்தில் உள்ள விடுதி

கேளம்பாக்கத்தில் உள்ள விடுதி

மேலும் போன் எண் உள்ளிட்ட அனைத்தையும் அவர் மாற்றியிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த ஷோபாவை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து ஷோபாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் மீது பலர் புகாரை கூறி வருகிறார்கள்.

மோசடி குறித்து விசாரணை

மோசடி குறித்து விசாரணை

ஷோபா பல ஆண்டுகளாக பல பேரிடம் மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. இந்த விவகாரத்தில் ஷோபாவின் உறவினர்களுக்கு ஏதேனும் தொடர்பிருக்கிறதா என்பதையும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களிடம் ஏமாற்றி வாங்கிய பணத்தை என்ன செய்தார் என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+