பிரமாண்டமாக நடந்த நடிகர் சின்னி ஜெயந்த் மகன் திருமணம்.. கலந்து கொண்ட பிரபலங்கள்.. மணப்பெண் இவர்தானா?
சென்னை: நடிகர் சின்னி மகனான விழுப்புரம் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது இந்த திருமண நிகழ்வில் முதல்வர் மு.க ஸ்டாலின் பாஜக பிரபலமான தமிழிசை சௌந்தர்ராஜன் உட்பட பல அரசியல் பிரபலங்களும் நடிகர் நடிகர்களும் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
நடிகர் சிம்னி ஜெயந்த் 1980 ஆம் ஆண்டு முதல் 1990களில் ஏராளமான படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமாக இருந்திருக்கிறார். சினிமாவிற்கு வருவதற்காக கிருஷ்ணமூர்த்தி நாராயணன் என்ற தன்னுடைய பெயரை இவர் சின்னி ஜெயந்த் என்று மாற்றி இருந்த நிலையில் டைரக்டர் ஆகவும் தயாரிப்பாளர், காமெடி நடிகர், மிமிக்ரி கலைஞர் என்று பல திறமைகளை கொண்டு பல படங்களில் கதாநாயகனின் நண்பனாக நடித்து பலருக்கும் பரிச்சயமாகி இருக்கிறார்.

அஷ்டலட்சுமி கிரியேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் சின்னி ஜெயந்த் மிமிக்ரி மற்றும் நகைச்சுவைக்காக டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இதுவரைக்கும் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சின்னி ஜெயந்த் இரு திரைப்படங்களை இயக்கியும் இருக்கிறார். அதில் எல்லாம் கிடைக்காத பெயரும் பெருமையும் இவருக்கு இவருடைய மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கொடுத்திருக்கிறார்.

அப்படி என்னதான் அவருடைய மகன் பெருமை சேர்த்தார் என்றால் சின்னி ஜெயந்த்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் 2019 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வு எழுதி அதில் நாட்டிலேயே 75 வது ரேங்க் வாங்கியுள்ளார். யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற ஸ்ருதன் ஜெய் நாராயணன் முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி மேலாண்மை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற பிறகு மத்திய அரசின் திறன் மேம்பாட்டு துணை செயலாளராக பணியாற்றி இருந்தார்.

அதற்கு பிறகு அவருக்கு தமிழ்நாட்டில் பணி ஒதுக்கப்பட்டது. ஸ்ருதன் ஜெய் நாராயணன் தமிழ்நாட்டில் தூத்துக்குடி பயிற்சி துணை ஆணையராக நியமிக்கப்பட்டார். அதற்கு பிறகு தான் திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியளராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முதன்மை அலுவலகத்தில் திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு சில மாதங்களுக்கு முன்பே எங்கேஜ்மென்ட் முடிவடைந்த நிலையில் திருமண அழைப்பிதழ்களை நடிகர் சின்னி ஜெயந்த் பலருக்கும் கொடுத்து வந்தார். நேற்று ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது. அவர் இஆ ப மானஸ்வி என்பவரை தான திருமணம் செய்து இருக்கிறார். இந்த தம்பதிகளை நேரில் சென்று முதல்வர் மு க ஸ்டாலின் உட்பட பல அரசியல் பிரபலங்களும் வாழ்த்தி இருக்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications