சிஎம் சார் இதை எதிர்பார்க்கல! விஜய் முதலமைச்சர் ஆன பிறகு நடந்த சம்பவம்! நடிகை சாந்தினி ஓபன்
சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ச. ஜோசப் விஜய், பதவியேற்ற சில நாட்களிலேயே தொடர்ச்சியான அதிரடி நடவடிக்கைகளால் அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் கவனம் ஈர்த்துக் கொண்டிருக்கிறார்.
பதவியேற்ற உடனே மூத்த அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து அரசியல் நாகரீகத்தை வெளிப்படுத்திய அவர், அடுத்த கட்டமாக மக்கள் வாழ்க்கையை நேரடியாக தொடும் முடிவுகளிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில் முதலமைச்சர் விஜயின் செயல்பாடுகள் குறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சாந்தினி வெளியிட்ட வீடியோ வைகலாகி வருகிறது

717 மதுபான கடைகள் மூடல்
முதலமைச்சர் விஜய் எடுத்த முடிவு அதிகமாக வரவேற்பு பெற்று வருகிறது. அதில் மிகவும் பேசப்பட்ட நடவடிக்கை 700க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகளை மூடும் உத்தரவு. பள்ளிகள், கல்லூரிகள், கோவில்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள கடைகளை முதற்கட்டமாக மூடுவது என்ற இந்த முடிவு, சமூக ரீதியாக பெரிய மாற்றத்துக்கான தொடக்கமாக பார்க்கப்படுகிறது.
பெண்கள் பாதுகாப்பு, குடும்ப அமைதி, சமூக ஒழுங்கு போன்ற பல அம்சங்களில் இது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே உருவாகியுள்ளது.
நடிகை சாந்தினியின் வீடியோ
இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்துவரும் நடிகை சாந்தினி வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர், "விஜய் சார் அரசியலுக்கு வந்த நாளிலிருந்தே நாங்க அவருக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்கோம். அவர் கண்டிப்பா ஜெயிக்கணும்... ஒரு மாற்றம் கொண்டு வரணும் என்று நாங்க நினைத்தோம்.
இப்போ அவர் அந்த மாற்றத்தை செயலில் காட்ட ஆரம்பிச்சிருக்கார். அதை கேட்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நாங்க அவருக்கு சப்போர்ட் பண்ணது தப்பா இல்லன்னு அவர் நிரூபிச்சிருக்கார்."
பெண்களுக்கு நிம்மதி தரும் முடிவு
மதுபான கடைகள் மூடல் குறித்து அவர் குறிப்பிட்டது மிகவும் கவனிக்கத்தக்கது, "முதலாவது முடிவே பெரிய நிம்மதியை கொடுக்குது. 700க்கும் மேற்பட்ட மதுபான கடைகளை மூடுறது சாதாரண விஷயம் இல்ல. இது ஆரம்பம் தான். அடுத்தடுத்து பெண்களுக்கும், குடும்பங்களுக்கும் பாதுகாப்பு தரும் இன்னும் நிறைய நல்ல திட்டங்கள் வரும் என்று நம்புறேன்," என்று கூறினார்.
சமூக சேவை பற்றிய கனவு
இந்த வீடியோவில் சாந்தினி தனது தனிப்பட்ட ஆசையையும் பகிர்ந்துள்ளார். "எனக்கு சின்ன வயசிலிருந்தே சமூகப் பணிகள் செய்யணும் என்ற ஆசை இருந்தது. இப்போ விஜய் சார் எடுத்துக்கொண்டு வரும் முடிவுகளை பார்த்ததும் அந்த ஆசை இன்னும் அதிகமா இருக்கு. கண்டிப்பா நான் சமூக சேவையில் ஈடுபடுவேன்," என்று தெரிவித்துள்ளார். மேலும் "இன்று ஒரு பெண்ணாக நான் நிம்மதியாக இருக்கிறேன் என்ற உணர்வு வருகிறது," என்று கூறியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலை
முதல்வர் ச. ஜோசப் விஜய் எடுத்த இந்த நடவடிக்கை, வெறும் அரசியல் முடிவாக மட்டுமல்லாமல், சமூக மாற்றத்திற்கான தொடக்கமாக பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் பலரும் இதை வரவேற்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக பெண்கள், "இது நீண்ட நாள் எதிர்பார்த்த முடிவு" என பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர். அதே நேரத்தில், இந்த நடவடிக்கை தொடர்ந்து முழுமையான மதுவிலக்கு நோக்கில் செல்லுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
திருவாரூர் மக்களுக்கு குட்நியூஸ்.. விஜயை டேக் செய்த மத்திய அமைச்சர்! -
இது அப்பட்டமான விதிமீறல்.. மேகதாது அணை கட்ட கர்நாடகாவை அனுமதிக்க கூடாது.. மோடிக்கு விஜய் கடிதம் -
8 கிராம் தங்கம் + பட்டுப் புடவை திட்டம்.. தவெக அரசு திருமண உதவித் திட்டம் விரைவில் தொடக்கம் -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா.. கைப்பட கடிதம் கேட்ட சபாநாயகர் -
தவெகவில் புதிய அதிகார மையம்.. கூடுதல் பவரோடு ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த்.. கவனிச்சீங்களா? -
விஜய் மேஜையில் இருக்கும் 4 ஃபைல்.. 'எஸ்' சொல்வாரா.. 'நோ' சொல்வாரா? கோட்டையில் அரங்கேறும் க்ளைமாக்ஸ் -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
நான் அரசியல்ல 15 வருஷமா இருக்கேன்! என்ன யூஸ்? விஜய் மீது பொறாமையா இருக்கு! ஓபனாக சொன்ன பவன் கல்யாண் -
ஆட்சிக்கு வந்த 15வது நாளிலேயே.. விஜய்யின் ஆபரேஷன் விசில்! பாஜக ஸ்டைல்! தூக்கப்பட்ட அதிமுக MLAக்கள் -
விஜய் மனசு வைக்கனும்.. நியூஸை கேட்டதும் ஷாக் ஆகும் மக்கள்! பெட்ரோலால் எகிறுது பிபி.. குறையுமா ’வாட்’












Click it and Unblock the Notifications