பதில் கேட்டது குத்தமா..!? நடிகர் சதீஷ்க்கு மகள் கொடுத்த பதிலடி.. இதுதான் ஒரே ரத்தமோ? இதை பாருங்க
சென்னை: காமெடி நடிகர் சதீஷ் தன்னுடைய மகளோடு க்யூட்டாக சண்டை போடும் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிந்திருக்கிறார்.
சாப்பிடும் பொருளை உடலில் எல்லாம் பூசிக்கொள்ளும் தன்னுடைய மகளிடம் கேள்வி கேட்கும் சதீஷ்க்கு அவருடைய மகள் க்யூட்டான பதில் கொடுத்திருக்கிறார்.

அதை பார்த்த ரசிகர்கள் பலர் காமெடி நடிகரின் மகள் என்றால் சும்மாவா? செமையாக அசத்துறாங்களே இந்த குட்டி பாப்பா என்று இந்த வீடியோவை வைரலாகி வருகின்றனர். அது குறித்து முழுமையாக பார்க்கலாம்.
வெள்ளி திரையில் பல முன்னணி நடிகர்களோடு காமெடி நடிகராக நடித்து வரும் சதீஷ் பலருக்கும் பரிசையமான ஒரு நடிகர் தான். இவருடைய டைமிங் காமெடியை ரசிக்கும் ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். இவர் சினிமாக்களில் பெரிய லெவலில் வந்தாலும் ஆரம்பத்தில் அடிமட்ட குடும்பத்தில் பிறந்து தான் தற்போது தன்னுடைய முயற்சியாலும், உழைப்பாலும் இவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்கிறார்.
ஆரம்ப காலகட்டத்தில் சதீஷுக்கு படிப்பதற்கு கூட வசதி இல்லாத நிலையில்தான் இருந்திருக்கிறார். அப்போது படிப்பின் மீது அதிகமான ஆர்வம் இருந்த சதீஷ் வீட்டில் இருந்த சூழ்நிலையின் காரணமாக படிப்பை விட்டு விட்டு வேலை தேடி அலைந்திருக்கிறார். அந்த நேரத்தில்தான் 14 வயதில் கிரேசி மோகன் குழுவில் இணைந்திருக்கிறார். இந்த குழுவில் எட்டு ஆண்டுகளாக பகுதி நேரமாக நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் கிரேசி மோகன் இவருக்கு படிப்பதற்கு உதவி செய்து இவரை படிக்கவும் வைத்திருக்கிறார்.
அதற்குப் பிறகு நடிகர் சதீஷ் படித்துக்கொண்டே பல நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்திருக்கிறார். அந்த நாடகங்கள் மூலமாக பல விருதுகளையும் பெற்றிருந்த நிலையில் ஏ.எல் விஜய் சதீஷை பொய் சொல்லப் போகிறோம் என்ற படத்திற்கு இணை உரையாடல் எழுத்தாளராக ஆக்கி இருக்கிறார். அதற்கு பிறகு அவருக்கு மதராசபட்டினத்தில் நடிகர் ஆர்யாவிற்க்கு நண்பராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் அவர் அறிமுகமானது ஜெர்ரி என்ற திரைப்படத்தில் தான். ஃபரிக் என்ற சிறிய கதாபாத்திரத்தில் தான். எந்த உரையாடலும் இல்லாமல் இரண்டு காட்சியில் வந்து போயிருக்கிறார்.
அதற்குப் பிறகுதான் சிவகார்த்திகேயனுடன் இணைந்து எதிர்நீச்சல் திரைப்படத்தில் பீட்டர் கேரக்டரில் நடித்திருப்பார். இந்த திரைப்படம் தான் இவருடைய திறமையை வெளி உலகத்திற்கு காட்ட தொடங்கியது. இந்த நிலையில் இப்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார்.
இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மகள் செய்யும் சேட்டை வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில் யோகட் சாப்பிட்டுக் கொண்டிருந்த சதீஷின் மகள் அதை தன்னுடைய கைகள் கால்களில் தேய்த்துக் கொண்டிருக்கிறார். அதை பார்த்து சதீஷ் சாப்பிடுவதற்கு தானே யோகட் கேட்ட? இதுதான் நீ சாப்பிடற லட்சணமா? என்று கேட்க, அதற்கு அந்த குட்டி குழந்தை சதீஷ் இடம் திருப்பி சாப்பிடுற லட்சணமா? என்று சொல்கிறது.
அதைத்தொடர்ந்து சதீஷ் பதில் சொல்லு என்று அதட்டுவது போன்று நடிக்க, அதற்கு "பதில்" என்று பதிலடி கொடுக்கிறது. அதைத் தொடர்ந்து சதீஷ் இனிமே இதே மாதிரி பண்ணுவியா ?என்று கேட்க, பண்ணுவேன் என்று தன்னுடைய கால்களில் யோகடை தடவிக் கொண்டே இருக்கிறது. மேலும் அந்த குழந்தையிடம் சதீஷ் அப்பா எப்படி அடிப்பேன் தெரியுமா? என்று மிரட்டுவது போன்று, பதில் சொல்லுடி என்று கேட்க," பதில்.! பதில்..! பதில்.!" என்று பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த க்யூட்டான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதற்கு நடிகை கஸ்தூரி பதில் பதில் பதில் என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications