+2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
சென்னை: இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் காமெடி நடிகர் கிங்காங் மகள் பிளஸ் 2 தேர்வு எழுதி இருந்த நிலையில் அவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம் இணையத்தில் பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
பல மாணவ மாணவிகளும், பெற்றோர்களும் ஆர்வத்தோடு காத்திருந்த பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகி இருக்கிறது. அதில் தாங்கள் நினைத்த மார்க் கிடைத்துவிட்டது என்று ஒரு சிலர் சந்தோஷப்பட்டு இருந்தாலும், பல மாணவ மாணவிகள் தாங்கள் நினைத்த மார்க்க கிடைக்கவில்லையே என்று வருத்தத்தோடு இருக்கின்றனர்.

அதே நேரத்தில் வெற்றி பெற்ற மாணவர்கள் இனி அடுத்த கட்டத்தில் என்ன செய்யலாம் என்று யோசனையில் இருக்கும் போது மாணவர்களை விடவும் அவர்களுடைய பெற்றோர்களும் தங்களுடைய பிள்ளைகளை அடுத்து என்ன படிக்க வைக்கலாம் என்று தேடலில் இருக்கின்றனர். இப்படியான நிலையில் சினிமாவில் காமெடியான கேரக்டரில் நடித்து பலரையும் சிரிக்க வைத்த நடிகர் கிங் காங் மகளும் இந்த முறை பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி இருக்கிறார்.
அவர் பெற்ற மதிப்பெண்கள் விபரங்கள் இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் கிங்காங் மகள் 404 மதிப்பெண்கள் வாங்கி பாஸ் ஆகி இருக்கிறாராம். இன்று வெளியான தேர்வு முடிவில் இது நல்ல மார்க். என்னுடைய பொண்ணு பாஸ் ஆனதில் மகிழ்ச்சி என்று கிங்காங் பெருமிதம் அடைந்துள்ளார். கிங்காங் கலா என்பவரை தான் திருமணம் செய்து இருக்கிறார் . இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
சமீபத்தில் கூட விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் கிங்காங் தன்னுடைய மகனோடு கலந்து கொண்டு விளையாடி இருந்தார். அதுபோல சில மாதங்களுக்கு முன்பு கிங்காங்கின் மகள் தன்னுடைய அப்பாவோடு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு இருந்தபோது நான் எங்கள் அப்பாவை டாடு என்று தான் கூப்பிடுவேன். அதோடு என்னுடைய நண்பர்கள் எல்லாம் என்னை பார்க்க வருகிறார்களோ இல்லையோ எங்க அப்பாவை பார்க்க தான் வருகிறார்கள்.
என்னைக்குமே எங்க அப்பா குள்ளமாக இருக்கிறாரே என்று நான் நினைத்து வருத்தப்பட்டது கூட கிடையாது. அவர் இப்படி இருப்பது தான் எங்களுக்கு ரொம்ப புடிச்சி இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதுபோல நடிகர் கிங்காங்கிற்க்கு 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வேலூரில் உள்ள ஒரு பல்கலைக்கழக கல்லூரியில் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கி இருந்தார்கள். அதுபோல சினிமாவில் இவருக்கு இவருடைய நடிப்பு திறமைக்காக தேசிய விருது வழங்கி உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications