இசையமைப்பாளர் இமான் செய்த பெரிய உதவி.. இப்போ ஒரு ஊரே கொண்டாடுது.. 8 ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த தீர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் இமான் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு கழிவறை கட்டி கொடுத்து இருக்கிறார். அந்த பள்ளியில் கடந்த எட்டு வருடங்களாக கழிவறை வசதி இல்லாமல் மாணவர்கள் கஷ்டப்பட்டு வந்த நிலையில் அவர்களுக்கு இமான் செய்த உதவி பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இசையமைப்பாளர் இமான் திரைப்படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். அதுபோல சமூக சேவகராகவும் இருந்து வருகிறார். அவருடைய பாடல்கள் 90ஸ் மற்றும் 2k கிட்ஸ்களையும் கவரும் விதத்தில் இருக்கிறது. அதேபோல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் நடுவராக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

D Iman vijay tv

இமான் செய்த உதவி

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை நிரூபிக்க போராடிக் கொண்டிருக்கும் பல குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருக்கிறார். கடந்த வாரத்தில் கூட அந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பாடிய குழந்தைகளை தன்னுடைய அடுத்த திரைப்படத்தில் பாடுவதற்கு வாய்ப்பு கொடுப்பதாக அறிவித்திருந்தார். அதுபோல குழந்தைகளின் படிப்பு செலவுக்கு ஆகவும் பல உதவிகள் செய்திருக்கிறார்.

மீனவ கிராமம்

கடந்த மாதத்தில் அவருடைய பிறந்த நாளின் போது உடல் உறுப்பு தானம் செய்து பலருக்கும் முன்மாதிரியாக மாறி இருக்கிறார். இந்த நிலையில் இப்போது இமான் செய்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதாவது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மரக்காணம் பக்கத்தில் உள்ள கூனி மேடு என்ற மீனவ கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 100க்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள்.

கழிவறை வசதி

இந்த பள்ளியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என்று கழிவறை வசதி இல்லாமல் இருக்கிறது. எட்டு வருடங்களாக இந்த பள்ளியில் மாணவர்கள் கழிவறை வசதி இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருந்த நிலையில் இது குறித்து இமானிடம் பேசி இருக்கிறார்கள். அப்போது மாணவர்களுக்காக நான் என்னால் முடிந்ததை செய்கிறேன் என்று தன்னுடைய தொண்டு நிறுவனத்தின் மூலமாக இரண்டு பாத்ரூம் கட்டுவதற்கு மூன்று லட்சம் நிதி உதவி செய்திருக்கிறார்.

மாணவர்களுக்கு செய்த உதவி

அதுபோல தன்னுடைய செலவில் அந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு சாப்பாடு வழங்கியிருக்கிறார். பள்ளியில் கழிவறை கட்டி முடித்த பிறகு இமான் அங்கு பார்வையிட சென்று இருந்தபோது அங்குள்ள மக்கள் அனைவரும் அவரை பாராட்டி இருக்கிறார்கள். பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளும் இமானுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள். இந்த வீடியோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

D Iman vijay tv

தத்தெடுத்த குழந்தை

அது குறித்து இமான் பேசும் போது என்னிடம் மாணவர்களுக்கு கழிவறை கட்ட வேண்டும் என்று கேட்டு வந்தார்கள். என்னால் முடிந்ததை நான் செய்திருக்கிறேன். குழந்தைகள் படிப்பு எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு ஆரோக்கியமும் முக்கியம் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். அதுபோல சில குழந்தைகளையும் இமான் மற்றும் அவருடைய மனைவி தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள். சமீபத்தில் இமான் தத்தெடுத்த மாற்றுத்திறனாளி ஒருவருடைய குழந்தைக்கு பிறந்தநாளை இமான் பிரம்மாண்டமாக கொண்டாடியிருந்தார். அப்போது அந்த குழந்தையும் அவருடைய பெற்றோரும் இமானுக்கு நன்றி தெரிவித்து உருக்கமாக பேசி இருந்தார்கள். அந்த வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+