விஜய், அஜித் கூட அப்படியெல்லாம் பண்ண மாட்டாங்க! ஆனால் ரஜினி செய்த செயல்! இசையமைப்பாளர் தேவா உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளராகக் கடந்த சில தசாப்தங்களாகத் திகழ்பவர் தேவா. தனது துள்ளலான இசையாலும், நாட்டுப்புற மெட்டுக்களாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். மெலோடி முதல் கானா வரை பல ஹிட் பாடல்களைக் கொடுத்த அவர், தற்போது முன்னணி நடிகர்களுடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித்துச் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ள கருத்துகள் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Deva Rajinikanth Vijay Ajith

தேவாவின் பேட்டி

தேவா, தனது பேட்டியில் நடிகர் ரஜினி, விஜய், அஜித் ஆகியோருடன் பணியாற்றியபோது நடந்த சில அனுபவங்களை வெளிப்படையாகப் பேசியுள்ளார். "விஜய், அஜித்துக்கும் பல ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளேன். ஆனா, அவங்க ரெண்டு பேரும் கம்போசிங்குக்கு எல்லாம் வரமாட்டாங்க... நான் ரொம்ப பிராங்கா சொல்றேன்... என் பாட்டை எந்த ஹீரோவும் பாராட்ட மாட்டாங்க. ஆனா, ரஜினி சார் ஒருத்தர் தான் போன் பண்ணிப் பாராட்டுவாரு... நானும் பார்த்தேன். சரி, மத்த நடிகர்களுக்கு அந்தப் பழக்கம் இல்லைனு விட்டுட்டேன்."

இசையமைப்பாளரின் உழைப்புக்குக் கிடைக்கும் மிகச் சிறிய அங்கீகாரத்தை கூடச் சில முன்னணி நடிகர்கள் வெளிப்படுத்தத் தவறுவது, இசையமைப்பாளர் தேவாவிற்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளதாகக் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.


காப்பிரைட் கேட்காத தேவாவின் மனநிலை

சமீபகாலமாகப் பேட்டிகளில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் தேவா, சில காலத்திற்கு முன்பு தான் இசையமைத்த பாடல்கள் இப்போதுள்ள படங்களிலும் பயன்படுத்தப்படுவதற்கு தான் காபி ரைட் கேட்கப்போவது இல்லை என்று சொல்லி இருந்தார். இப்போதுள்ள இளம் தலைமுறையினரும் என்னுடைய பாடலை ரசித்து கேட்பது எனக்கு சந்தோஷம், அந்த பாடல்களுக்கு இசை அமைத்தது நான்தான் என்று தெரிந்தாலே போதும் என்று பெருந்தன்மையாக பேசியிருந்தார்

தான் இசையமைத்த சில பெரிய பட்ஜெட் படங்களுக்குச் சரியாகச் சம்பளம் கிடைக்காததால், ரொக்கமாக பணம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டார். அவர், "பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல், தன் இசைக்குப் பெரிய ரீச் கிடைத்தால் போதும் என்ற நிலைமைக்கு வந்துவிட்டேன். அதனால்தான், சில புதிய இயக்குநர்கள் படங்களுக்குச் சம்பளம் என்ற பேச்சையே எடுக்காமல் இசையமைக்கிறேன்" என்று முன்பு ஒருமுறை கூறியிருந்தார்.

தேவாவின் ஹிட் சாதனைகள்

இசையமைப்பாளர் தேவா, தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் பல ஹிட் பாடல்களை எழுதி, ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். விஜய்க்கு இவர் இசையமைத்த பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் பெரிய ட்ரெண்ட் செட்டராக இருந்தன. 'நிலவைக் கொண்டு வா', 'நிலா, நிலா' போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.

அஜித் ஹிட் பாடல்கள்

அஜித்தின் ஆரம்பகால வெற்றிகளில் தேவாவின் இசைக்கும் முக்கியப் பங்கு உண்டு. 'அமர்க்களம்' படத்தின் அனைத்துப் பாடல்களும் மாஸ் ஹிட்டாக அமைந்தன. தேவா இசையில் ரஜினி நடிப்பில் வெளியான 'பாட்ஷா' மற்றும் 'அண்ணாமலை' போன்ற திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்களும், பின்னணி இசையும் இன்றும் காலத்தால் அழியாதவை. இத்தகைய ஜாம்பவான் இசையமைப்பாளருக்கு ரஜினி மட்டுமே போன் செய்து பாராட்டுத் தெரிவிப்பது, ரஜினியின் தனிப்பட்ட மரியாதையை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர்களின் உழைப்புக்குரிய அங்கீகாரத்தை நடிகர்கள் வழங்க வேண்டும் என்ற மறைமுகக் கருத்தை தேவா முன்வைத்திருப்பது, திரை உலகினர் மத்தியில் விவாதத்தைத் தூண்டியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+