இசையமைப்பாளர் இமானுக்கு வந்த சிக்கல்.. அந்த பதிவுகளுக்கு நான் பொறுப்பல்ல! அவரே வெளியிட்ட போஸ்ட்
சென்னை: இசையமைப்பாளர் இமான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய எக்ஸ் தளத்திலிருந்து வரும் பதிவுகளுக்கு தான் பொறுப்பல்ல என்று கூறியிருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இசையமைப்பாளர் டி இமான் பல ஹிட் பாடல்களுக்கு இசையமைத்து பலருடைய சோகங்களை மறக்க செய்து கொண்டிருக்கிறார். இவருடைய பாடல்கள் எல்லாமே தனி ரகமாக இருக்கிறது. அவருடைய பாடல்களை கேட்கும்போது ஒருவிதமான புத்துணர்வு பலருக்கும் ஏற்படும். அதே நேரத்தில் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் சமூக ஆர்வலராகவும் சேவைகள் செய்து கொண்டிருக்கிறார். தன்னால் முடிந்த அளவிற்கு பிறருக்கு உதவிகள் செய்து கொண்டிருக்கிறார்.

உடல் உறுப்பு தானம்
சமீபத்தில் கூட தன்னுடைய பிறந்த நாளில் உடல் உறுப்பு தானம் செய்து பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார். தான் உடல் உறுப்பு தானம் செய்ததால் தன்னுடைய மனைவியும் தன்னைப் போல முடிவெடுத்திருக்கிறார். அதேபோல எங்களுடைய உறவினர்கள் பலரும் இந்த முடிவுக்கு பாராட்டு தெரிவித்து இருக்கிறார்கள். அவர்களும் உடலுறுப்பு தானம் செய்யப் போகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள் என இமான் பகிர்ந்து இருக்கிறார்.
சூப்பர் சிங்கர் நடுவர்
அதுபோல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருக்கிறார். குழந்தைகளுக்கு படிப்பு செலவுகள் மற்றும் குடும்பத்திற்கு அத்தியாவசிய செலவுகளையும் இமான் செய்து கொடுத்திருப்பது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இமான் பதிவு
இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இமான் பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய x தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார். அந்த பதிவில், "எனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். ஹாக்கர் எனது கணக்கை தொடர்புடைய மின்னஞ்சலையும் மாற்றி இருக்கிறார்.

மேலும் கடந்த 24 மணி நேரத்திற்குள் எனது எக்ஸ் பக்கத்தில் பதிவுகளை பதிவிட்டு இருக்கிறார். எனது கணக்கை விரைவில் மீட்டு தருமாறு எக்ஸ் தள நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்திருக்கிறேன். நான் 20 ஆண்டுகளுக்கு மேலாக இசைத்துறையில் இருப்பதால் என்னை பின்தொடர்பவர்களுடனான தொடர்பு எனக்கு மிகவும் முக்கியமானது.
இது அராஜகம்
அதுபோல என்னுடைய எக்ஸ் பக்கத்தில் இருந்து ஏதாவது பதிவுகள் வந்தால் அதனை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம். எக்ஸ் நிர்வாகம் உடனடியாக என்னுடைய கணக்கை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த நேரத்தில் உங்கள் ஆதரவுக்கு நன்றி. எனது கணக்கை திரும்ப பெற்றவுடன் உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறேன்" என்று தெரிவித்து இருக்கிறார். சமீபத்தில் இணையதள ஹேக்கர்களின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
ஹேக்கர்ஸ் தொல்லை
பல பிரபலங்களின் இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கி விடுகிறார்கள். ஒரு சில பிரபலங்களின் அக்கவுண்டில் இருந்து அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் மிரட்டியும், ஏமாற்றியும் பணம் பறித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல பிரபலங்கள் பற்றி அவர்களுடைய சோசியல் மீடியா பக்கங்களில் தேவையில்லாத பதிவை ஏற்பட்டு மக்கள் மத்தியில் அவர்களுக்கு இருக்கும் நன்மதிப்பை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இணையவாசிகள் கருத்து
அதனால் இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும், சமூக வலைத்தளத்தை பயன்படுத்துபவர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications