பட்டுச்சேலையில் மேரேஜ் போஸ் கொடுத்த பிரியா... சொக்கிப் போன ரசிகர்கள்
சென்னை: பஞ்சு மிட்டாய் வண்ணத்தில் பட்டு சேலையில் பளபளக்கும் பவானியை பார்த்ததும் ரசிகர்கள் பரிதவித்து போயிருக்கிறார்கள்.
அந்தச் க்யூட்டான சிரிப்பை பார்த்து சில இளைஞர்களின் மனம் இறக்கை கட்டி பறக்கிறது.
இன்ஸ்டாகிராமில் இவருடைய போட்டோக்கு இவர் கொடுத்த கேப்ஷன் தான் ரசிகர்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அம்மாவுக்கு பிடித்த போஸ்
மணமகன் தேவை.. விளம்பரத்திற்கு பிரியா பவானி சங்கர் கொடுத்துள்ள போஸ்கள், அவரது ரசிகர்களிடையே அதிகமான லைக்குகளையும், கமெண்ட் களையும், பெற்று வருவதோடு மட்டுமின்றி சிறிய குழப்பத்தையும்.. சந்தேகங்களையும்.. ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளராக அறிமுகம்
ஒரு செய்தி வாசிப்பாளராக தன்னுடைய கேரியரை துவங்கிய பிரியா பவானி சங்கர், தன்னுடைய எளிமையான அழகினாலும்.. செய்தி வாசிக்கும் ஸ்டைலாலும்.. அப்பொழுதே நன்கு பிரபலமாக இருந்தார்.அதனைத் தொடர்ந்து விஜய் டிவி சீரியல்களில் நடிக்கத் தொடங்கிய பிரியா பவானி சங்கர் தன் திறமையையும், அழகையும் மெருகேற்றிக் கொண்டு சின்னத்திரையில் சக்ஸஸ் ஆனதோடு மட்டுமின்றி..'மேயாத மான்..' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக வெள்ளித்திரையிலும் அறிமுகமானார். பார்ப்பதற்கு அழகான பக்கத்து வீட்டு பெண் போல் இருப்பதால் தமிழ் ரசிகர்கள் இவரை லைக் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

வரிசைகட்டும் திரைப்படங்கள்
வரிசையாக பல படங்களில் கமிட்டாகி தற்போது முன்னணி கதை நாயகியாகவும், ராசியான நடிகையாகவும்,தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.இவருக்கான ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும்.. இவரோ ராஜவேலு என்பவரை பத்து வருடமாக உருகி ரசித்து காதலித்து வந்ததாக கூறினார். அவ்வப்போது இருவரும் இணைந்து எடுத்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்தும் வந்தனர். ஆனால் சமீபகாலமாக இவர் ஷோசியல் மீடியாவில் பதிவு செய்யும் கருத்துக்கள் இவர்களுக்குள் பிரேக் அப் ஆகிவிட்டதோ..! என்ற சந்தேகத்தை இவர்களது ரசிகர்களிடையே கிளப்பியுள்ளது.

குழம்ப வைக்கும் கேப்ஷன்
ரீசன்ட் ஆக பிரியா பவானி சங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவில் 'யாராவது என்னுடன் வாழ்க்கை முழுவதும் இருப்பேன் என்று சொன்னால் என்னுடைய ரியாக்சன் இதுதான்' என குறிப்பிட்டு மீம்ஸ் ஒன்றை பதிவு செய்திருந்தார் ஒருவேளை இது (பிரேக் அப்)அதுவாகத்தான் இருக்குமோ..! என்று ரசிகர்கள் யோசித்து வந்த சூழ்நிலையில்.., தற்பொழுது மீண்டும் 'அம்மாவின் ஃபேவரட் மேட்ரிமோனியல் போஸ்' என்று இவர் போஸ்ட் செய்துள்ள போட்டோக்கள் இவருக்கு பிரேக் அப் ஆனதை உறுதி செய்வதோடு.. மட்டுமின்றி வீட்டில் மாப்பிள்ளை பார்க்கவும் தொடங்கிவிட்டனரோ... !? என்று இவர்களது ரசிகர்கள் இணையத்தில் சந்தேகங்களுடன் விவாதித்து வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications