Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் டிவி நிகழ்ச்சியில் அசம்பாவிதம்.. கதறி அழுதும் பாதியில் அனுப்பப்பட்ட போட்டியாளர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2 நிகழ்ச்சியில் இருந்து ஒரு போட்டியாளர் அதிரடியாக வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அவர் வெளியே செல்வதற்கு முன்பு கண் கலங்க பேசி இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர் வாங்கிய விஜய் டிவியில் புதிது புதிதாக நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகி வருகிறது. சமீபத்தில் தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி முடிவடைந்தது. அதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.

vijay tv ramba

அதேபோல ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்று விட்டால் அதில் அடுத்தடுத்த சீசன் தொடங்குவது வாடிக்கையாக இருக்கிறது. அதுபோலத்தான் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சி கடந்த வருடத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சி பெரிய அளவில் வெற்றி அடைந்தது‌. அதில் நடுவராக நடிகை மீனா, ஸ்ரீதேவி, சாண்டி மாஸ்டர் இருந்தனர்.

அது போல நிகழ்ச்சியை நடிகர் ரியோ ராஜ் தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிலையில் இரண்டாவது சீசன் சமீபத்தில் தொடங்கி இருக்கிறது. இதில் நடிகை மீனாவுக்கு பதிலாக நடிகை ரம்பா நடுவராக வந்திருக்கிறார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி வரும் இந்த பிப்ரவரி எட்டாம் தேதி மற்றும் ஒன்பதாம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது.

இதில் ஒரு போட்டியாளர் அதிரடியாக வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இந்த அதிர்ச்சியான ப்ரோமோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வாரம் ஆண் போட்டியாளர்கள் தங்களுடைய திறமையை நிரூபிக்க, அவர்களை பெண் போட்டியாளர்கள் ஜோடியாக செலக்ட் செய்கிறார்கள். அதில் பிரதீப் என்ற போட்டியாளர் டான்ஸ் ஆடுவதை பார்த்து ராணி என்ற போட்டியாளர் முதலில் அவருக்கு ஹார்ட் கொடுத்து அவரை தனக்கு ஜோடியாக செலக்ட் செய்கிறார்.

பிறகு சாண்டி மாஸ்டர் நீங்கள் ஜோடியாக தேர்ந்தெடுத்தது உறுதி தானா? என்று கடைசியாக எல்லோரிடமும் கேட்கும்போது ராணி நான் பிரதீப்பை தேர்ந்தெடுத்ததை வாபஸ் செய்கிறேன். பிரதீப்புக்கு பதிலாக நான் இன்னொரு நபரை ஜோடி மாற்றிக் கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். இதனால் முதல் போட்டியாளராக பிரதீப் வெளியேற்றப்படுகிறார்.

அதனால் அவர் கண்கலங்கி பேசியிருக்கிறார். அதில் நான் ஒன்னு தான் சொல்ல ஆசைப்படுறேன், எனக்கு ஒரு விஷயம் கிடைச்சு... அது என் கையில் இருந்து போகும்போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது. இந்த டான்ஸ்காக நான் ஏழு வருஷமா இந்த ஊரில் இருக்கிறேன். சென்னையில் தங்க இடம் இல்லாமல் கோயம்பேட்டில் படுத்துருக்கிறேன்.

பார்க்கில் இருந்திருக்கிறேன், இப்பொழுது தங்கறதுக்கு இடம் இல்லாம சர்ச்சில் தான் நான்கு வருஷமா ஸ்டே பண்ணுறேன். இந்த டான்ஸ் தான் எனக்கு வாழ்க்கை. அதை வைத்து மேல வரணும் என்று நினைத்தேன்.. அது முடியல. எங்க அம்மாவுக்கு தான் சாரி சொல்லணும்னு நினைக்கிறேன். ஏன்னா எங்க அம்மா கிட்ட நான் ஒன்னு சொன்னேன் இந்த முறை கண்டிப்பா செலக்ட் ஆகிடுவேன்னு சொன்னேன். அது இப்போ நடக்கல என்று அவர் அழுதபடி அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே செல்கிறார்.

இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதோடு பிரதீப் வேண்டாம் என்று சொன்ன ராணி குறித்தும் சிலர் இணையத்தில் திட்டி வருகிறார்கள். அதுபோல பிரதீப்புக்கு அதிகமான ஆதரவு அதிகரித்து வருகிறது. பிரதீப் திறமைக்கு சரியான அங்கீகாரம் விஜய் டிவி கொடுக்க வேண்டும் என்று பலர் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்.

பிரதீப்பை மீண்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனாலும் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+