இப்படி பலூன் உடைக்கணுமா? கட்டிப்புரண்டு உருண்டு.. ரீல் ஜோடியை கண்டு விக்கித்த நேயர்கள்.. என்னாச்சு
சென்னை: டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் சமீப காலமாகவே ஆபாசம் புகுந்துவிட்டதாக முணுமுணுப்புகள் எழ தொடங்கிவிட்டன. இதுகுறித்த நேயர்களின் கருத்துக்களும், மிகப்பெரிய கவனத்தை பெற்று வருகின்றன.
சின்னத்திரையும், சினிமாவை போலவே, ஆபாசங்களில் இறங்கிவிட்டதாக சமீபகாலமாகவே விமர்சிக்கப்பட்டு வருகிறது.. சீரியல்களிலும் இந்த நிலைமை வந்துவிட்டது. ஆரம்பத்தில், நல்ல குடும்ப பாங்குடன் சீரியல்கள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், மெல்ல மெல்ல சினிமாவை போலவே, முதலிரவு காட்சி முதல் கவர்ச்சி அம்சங்கள் வரை புகுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஆனால், சீரியல்களையும் தாண்டிவிடுகிறது டிவிக்களில் நடத்தும் ரியாலிட்டி ஷோக்கள்.. ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் புகுந்துவிட்டதாக பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்தபடியே உள்ளது. எனினும், ரியாலிட்டி ஷோக்கள் என்ற பெயரில், முகம் சுளிக்கக்கூடிய சம்பவங்கள் நடப்பதாக புலம்பல்கள் வெடிக்க துவங்கியிருக்கின்றன.
ரியல் ஜோடி: இந்த லிஸ்ட்டில் இன்னொரு ரியாலிட்டி ஷோவும் சேர்ந்துள்ளது.. ஜீ தமிழில் சீரியலில் ஜோடியாக நடிப்பவர்களை வைத்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.. அதாவது ரீல் ஜோடிகள் பங்கேற்கும் பலூன் உடைக்கும் போட்டி நடத்தப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் ஜோடிகள் நன்றாகத்தான் விளையாடி கொண்டிருந்தார்கள். ஆனால், திடீரென பலூன் உடைக்கும் போட்டியில், ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து புரண்டு, பலூன்களை வெடிக்க துவங்கிவிட்டனர்.. இதைப்பார்த்ததுமே, தொகுப்பாளர்களே அதிர்ச்சியாகிவிட்டனர்.. இந்த நிகழ்ச்சியை டிவியில் பார்த்த நேயர்களும் முகம் சுளித்துவிட்டனர்..

பலூன்கள்: இப்படியெல்லாம் கட்டிப்பிடித்து, புரண்டு, உருண்டு பலூன்களை உடைக்க வேண்டுமா? இதை எப்படி குடும்பத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை உட்கார்ந்து பார்ப்பது? என்றும் கமெண்ட்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
தமிழில் மட்டுமல்ல, தெலுங்கு டிவி ஷோக்களிலும் இந்த சலசலப்பு உண்டு.. சமீபத்தில்கூட அதிக கவர்ச்சியுடன் 3 இளம் பெண்கள் டான்ஸ் ஆடியிருந்தது இணையத்தில் டிரெண்டாகி இருந்தது.. கையில் பக்கெட், துடைப்பம், வைத்துக் கொண்டு, துணி துவைப்பது போல, பெருக்குவது போல என டான்ஸ் ஆடியிருந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பலரும் இதெல்லாம் டிவியில் ஒளிபரப்பலாமா? என்று ஆவேசத்துடன் கேட்டிருந்தனர்.
தர்மசங்கடம்: எப்போதுமே சினிமா தியேட்டர்களில் படங்கள் வெளியானதுமே, அவைகள் டிவியில் ஒளிபரபரப்பு செய்யும்போது, நிறைய சீன்கள் அந்த படங்களிலிருந்து நீக்கப்பட்டிருக்கும்.. ஆனால், இப்போது டிவியிலேயே இதுபோன்ற கவர்ச்சியும், ஆபாசமும் கலந்து, ரியாலிட்டி ஷோக்கள் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருவது, இல்லத்தரசிகள் முதல் பலரையும் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications