இந்தி நம் தேசிய மொழி.. நடிகர் சிவராஜ்குமார் பேச்சால் கிளம்பிய சர்ச்சை.. நெட்டிசன்கள் எழுப்பும் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பான் இந்தியா படம் என்றாலே இப்போது மொழி சம்பந்தமான கேள்விகள் வருவது புதிதல்ல. ஆனால் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சிவராஜ் குமார் தனது புதிய படத்தின் விழாவில் இந்தி குறித்து பேசிய ஒரு விஷயம் இப்போது சோசியல் மீடியாவில் பெரிய விவாதமாக மாறி இருக்கிறது.

இந்தி என்னுடைய இரண்டாவது மொழி. எனக்கு நன்றாக இந்தி பேச தெரியும். அது ஒரு எளிமையான மொழி. நம் நாட்டின் தேசிய மொழி. எனக்கு இந்தி தெரியாமல் இருக்குமா? நிச்சயமாக தெரியும் என்று சிவராஜ்குமார் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது. அவரது இந்த கருத்து தான் தற்போது நெட்டிசன்களிடம் விவாதத்தையும், எதிர்ப்பையும் கிளப்பி இருக்கிறது.

Shivarajkumar

நடிகர் சிவராஜ்குமார் பேச்சு

இந்தி இந்தியாவின் தேசிய மொழி கிடையாது. இந்திய அரசியலமைப்பின் படி இந்தி ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ மொழி. ஆங்கிலமும் ஒன்றியத்தின் அதிகாரப்பூர்வ பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் தேசிய மொழி என்று அரசியலமைப்பில் எந்த மொழியும் சொல்லவில்லை என்று நெட்டிசன்கள் சிவராஜ் குமாரின் வார்த்தைக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

இந்தி பற்றி பேச்சு

சிவராஜ்குமார் தற்போது இயக்குனர் ஆர் சந்துருவின் ஒரிஜினல் மான்ஸ்டர் படத்தில் நடிக்கிறார். கன்னடம், இந்தி என இரு மொழிகளிலும் உருவாகும் இந்த படம் அவருக்கு இந்தி சினிமாவில் முக்கியமான அறிமுகமாகவும் இருக்கிறது. இந்த படத்தின் விழாவில் அவரிடம் இந்தி வசனங்களை பேசுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது தான் அவர் இப்படி பேசி இருக்கிறார். அதாவது இந்தி மொழி தனக்கு புதிய மொழியே கிடையாது, என்பதையும் நாடு முழுவது ரசிகர்களுடன் தொடர்பு கொள்ள அந்த மொழி உதவும் என்பதையும் சொல்ல வந்திருக்கிறார் என ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக சப்போர்ட் கொடுக்கிறார்கள்.

ரசிகர்கள் கருத்து

ஆனால் அவர் தேசிய மொழி என்று பயன்படுத்திய வார்த்தை தான் இப்போது பிரச்சனையாகி விட்டது. ஒரிஜினல் மான்ஸ்டர் என்பது ஆரம்பத்தில் இருந்து ஒரு பெரிய மல்டிலிங்குவல் முயற்சியாகவே உருவாகிறது. 1990கள் முதல் 2000 காலகட்டத்தை பின்னணியாக கொண்டு உருவாகும் இந்த படத்தில் வன்முறை, பணம், மனிதர்களின் இன்னொரு முகம் என பல விஷயங்கள் பேசப்பட இருப்பதாக பட குழு தெரிவித்துள்ளது.

மலையாளம், தமிழ், தெலுங்கு படங்கள் மற்ற மாநிலங்களின் வரவேற்பு பெறுகின்றன. முன்பு கூட டப்பிங் மூலம் படங்கள் மொழிகளை கடந்து சென்றிருக்கின்றன. இப்போது பான் இந்தியா சினிமாவுக்கான வாய்ப்பு எல்லோருக்கும் இருக்கிறது என்றும் அவர் பேசியிருந்தார். ஆனால் அதுவெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை.

மொழி சர்ச்சை

அவர் தேசிய மொழி என்று இந்தி பற்றி பெருமையாக பேசியதுதான் இப்போது பஞ்சாயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சில நெட்டிசன்கள் அவருடைய பேச்சுக்கு "சிவாண்ணா இந்தி பேசுறது ஓகே.. ஆனா இந்தியாவுக்கு தேசிய மொழி இருக்குன்னு மட்டும் எங்கிருந்து வந்தது" என்று கலாய்க்கிறார்கள். பான் இந்தியா படம் எடுக்க வந்தவர்களுக்கு பான் இந்தியா அளவிலான மொழி சர்ச்சையும் சேர்ந்து விட்டது போல.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+