சீரியல் நடிகை லதா ராவ் பற்றிய சர்ச்சை.. பிரபலமானதும் வந்த குழப்பம்.. முற்றுப்புள்ளி வைத்த வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியல் நடிகை லதா ரா சில நாட்களுக்கு முன்பு சென்னை ஏர்போர்ட்டில் பீரியட்ஸ் நேரத்தில் தான் பட்ட அவஸ்தைகள் குறித்து ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார் அந்த சமயத்தில் அந்த வீடியோ பெரிய அளவில் வைரலானதும் அதே சமய நேரத்தில் அவரைப் பற்றிய சர்ச்சைகளும் பரவி வந்தது. அவரைப் பற்றியும், அவருடைய கணவர் ராஜ் கமல் பற்றியும் சில வதந்திகள் பரவி வந்த நிலையில் அதற்கு அவருடைய குடும்பத்தினர் இப்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர்.

சின்னத்திரை தம்பதி

நடிகை லதா ராவ் அவருடைய கணவர் ராஜ் கமல் இருவருமே பல வருஷங்களாக சின்னத்திரையில் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தில்லாலங்கடி திரைப்படத்தில் வடிவேலுக்கு மனைவியாக அவர் நடித்தது பெரிய அளவில் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது. அதை தொடர்ந்து அவர் தொடர்ந்து சினிமாவில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் பெரிதாக அதுபோல எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஆனால் என்னுடைய பிறந்த வீடான சின்னத்திரை இருக்க நான் ஏன் கவலைப்பட வேண்டும் என்று இப்போதும் தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Latha Rao Actress Raj Kamal

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என்று 20 வருடங்களுக்கு மேலாக அவர் தொலைக்காட்சியில் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் சென்னை ஏர்போர்ட்டில் பீரியட்ஸ் நேரத்தில் சானிட்டரி நாப்கின் இல்லாமல் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். உடனே அது இணையத்தில் வைரலாகிவிட்டது. பல பெண்களும் அதற்கு ஆதரவு கொடுத்தனர். ஆண்களும் கூட இந்த பிரச்சனைக்கு தீர்வு வரவேண்டும் என்று குரல் கொடுத்தனர்.

சீரியல் நடிகை லதா ராவ் வீடியோ

அதைத்தொடர்ந்து ஏர்போர்ட்டில் சானிட்டரி நாப்கின் வைக்கப்பட்டிருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இந்த நிலையில் லதா ராவ் வெளியிட்ட வீடியோவிற்கு அதிகமான ரசிகர்கள் நீங்க உங்க கணவரை பிரிந்து விட்டீர்களா? சமீபகாலமாக அவருடன் எந்த போஸ்ட்டும் போடவில்லையே என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் தான் ராஜ் கமல் மற்றும் அவருடைய மகள் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர்.

Latha Rao Actress Raj Kamal

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

அதாவது லதா பேசிய வீடியோ வைரல் ஆனதும் அதை ஒரு மினி செலிப்ரேஷனாக கொண்டாடி இருக்கிறார்கள். அதற்காக லதா, ராஜ்கமல் தம்பதியின் மகள் கேக் வெட்டி இந்த மகிழ்ச்சியை கொண்டாடி இருக்கிறார். அவர்களுடைய குடும்பத்தினர் ஜாலியாக இந்த வீடியோவில் பேசிக் கொண்டிருக்கின்றனர். இதை பார்த்த ரசிகர்கள் அப்போ உங்களுக்கும் உங்களுடைய கணவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லையா? தேவையில்லாத சர்ச்சைகளை நாங்கள் நம்பிட்டோமே என்று சொல்லி வருகின்றனர்.

Latha Rao Actress Raj Kamal

லதா ராவ் மற்றும் ராஜ்கமல் இருவரும் கடைசியாக எலக்சனுக்கு ஓட்டு போட்டுவிட்டு போட்டோஸ் போஸ்ட் போட்டு இருக்கீங்கள். அதற்க்கு பிறகு லதா மட்டும் தனியாக இருக்கும் வீடியோக்களை போஸ்ட் போட்டதும் ரசிகர்கள் இந்த தம்பதியும் பிரிந்து விட்டார்களா? என்று கொளுத்தி போட்டு விட்டார்கள். ஆனால் அது வதந்தி தான் என்று இப்போ உறுதியாகி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+