Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

CWCயில் சரத்குமார்..மணிமேகலை செயலை பார்த்தீங்களா?..திகைத்துப் போன ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 இன் ஜூன் 10 மற்றும் 11ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

இந்த வார நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சரத்குமார் கலந்து கொண்டிருக்கிறார்.

அப்போது நடிகர் சரத்குமார் காலை தொட்டு கும்பிட்டு நெற்றியில் பொட்டு வைத்து புகழ் மற்றும் மணிமேகலை இருவரும் அட்ராசிட்டி செய்து இருக்கிறார்கள்.

Cook with Comali 10th and 11th june 2023 promo 1 actor Sarathkumar as a special guest

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியில் ஒன்றாக தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. இது ஒரு சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் காமெடி நிறைந்ததாக இருப்பதாலேயே இதை அதிகமான ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

ஒவ்வொரு வாரமும் கோமாளிகளை வைத்துக்கொண்டு குக்குகள் சமையல் செய்து அசத்தி தங்களுடைய திறமையை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது. ஏற்கனவே டாப் 5 பைனல் லிஸ்டில் முதல் ஆளாக சிவாங்கி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

Cook with Comali 10th and 11th june 2023 promo 1 actor Sarathkumar as a special guest

அதைத்தொடர்ந்து யாரெல்லாம் டாப் 5 ஃபைனலிஸ்டாக வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது. இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் திரைப்படங்களின் ப்ரோமோஷனுக்காக பல பிரபலங்கள் கலந்து கொண்டு வருகிறார்கள்.

அந்த வரிசையில் இந்த வாரம் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகர் அசோக் செல்வன் இருவரும் கலந்து கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த வாரம் மணிமேகலை மீண்டும் கலந்து கொண்டிருக்கிறார். அதுவும் தொகுப்பாளராக களம் இறங்கி இருக்கிறார். இது அவருடைய ரசிகர்களுக்கும் செம சர்ப்ரைஸ் தான்.

Cook with Comali 10th and 11th june 2023 promo 1 actor Sarathkumar as a special guest

இந்த நிலையில் மணிமேகலை சரத்குமாரை வரவேற்றபோது அவர் நடந்து வந்து கொண்டிருக்கும்போது கோமாளிகள் அவருடைய காலில் விழுந்து கும்பிடுகின்றனர். பேக்ரவுண்ட் பாடலாக நாட்டாமை பாடுபட்டா... என்னும் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க கோமாளிகள் செய்யும் செயலை பார்த்து சரத்குமார் நான் இந்த விளையாட்டுக்கு வரல என்று அப்போதே கிளம்ப பார்க்கிறார்.

பிறகு அவரை சமாதானப்படுத்தி மேடைக்கு அழைத்து வந்து அவரிடம் சரத்குமாருக்கும் சமையலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா சார் என்று ரக்சன் கேட்க நானே ஒரு சமையல்காரன் தான். உப்பை குறைச்சி போடு, காரம் அதிகமா போடு என்று டக்கு டக்குனு சமையல் நடந்துக்கிட்டே இருக்கணும் என்று பேசுகிறார்.

அப்போது மணிமேகலை சார் நீங்க ஷோவோட கனெக்ட் பண்ணி பேசிகிட்டு இருக்கீங்க பாத்தீங்களா என்று பெருமையாக பேச, அப்போது பேக்ரவுண்டில் சூரியவம்சம் திரைப்படம் மியூசிக் ஒலிக்கிறது. அதைக் கேட்டு புகழ் மற்றும் மணிமேகலை இருவரும் பீல் பண்ணுவது போல நடிக்க, சரத்துக்குமார் தன்னுடைய நெஞ்சில் கை வைத்து தடவிக் கொண்டு இருக்கிறார்.

அப்போ உஷாரான புகழ் மணிமேகலை இதை எதற்கு சொல்றானா, இந்த நாலு வருஷமா இந்த ஷோவில் இருக்கா, அவளுக்கும் ஷோவிற்கும் கனெக்ட் ஆகல என்று சொல்ல, அங்கிருந்து அனைவரும் சிரிக்கின்றனர். அப்போது மணிமேகலை நான் சார்கிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு கனெக்ட் ஆக பார்க்கிறேன் என்று சொல்லி, கையில் இருக்கும் பொருளை கீழே போட்டு அந்த பொருளை எடுப்பது போல காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார்.

மணிமேகலை செய்ததை பார்த்து புகழும், மோனிஷாவும் இந்தா நாங்களும் வாரோம் என்பது போல சூரியவம்சம் தேவயானி ரேஞ்சில் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகின்றார்கள். இந்த கலகலப்பான ப்ரொமோ தற்போது வைரலாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+