CWC 5: இந்த முறை குக்குகள் மட்டும் புதுசு இல்ல.. கோமாளிகளும் தான்.. யாரெல்லாம் என்ட்ரினு தெரியுமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனை ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் வரும் மார்ச் 27ஆம் தேதி ஐந்தாவது சீசன் லாஞ்சாக இருக்கிறது. இதற்கான அதிகாரபூர்வமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதே நேரத்தில் இந்த சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் தற்போது குக்குகளைப் போலவே இந்த முறை ஒரு சில கோமாளிகளும் புதியதாக அறிமுகமாகி இருக்கிறார்கள்.

விஜய் டிவியில் எத்தனையோ ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் அதிகமாக பாப்புலராக இருக்கிறது. இந்த நிகழ்ச்சி இதுவரைக்கும் நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து இருக்கிறது. ஐந்தாவது சீசன் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே பல மாதங்களாக ரசிகர்கள் இருந்தனர்.
இந்த முறை ஐந்தாவது சீசன் பல்வேறு புதுமைகளுடன் அமர்க்களமாக வரும் ஏப்ரல் 27ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது. குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த நான்கு சீசன்களாக வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோர் நண்பர்களாக இருந்தனர். ஆனால் இந்த முறை வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டதால் அவருக்கு பதிலாக புதிய நடுவராக மாதம்பட்டி ரங்கராஜனை களம் இறக்கி உள்ளனர்.
சமையல் துறையில் கிங்காக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் சினிமாவிலும் மெஹந்தி சர்க்கஸ் மற்றும் பென்குயின் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். அதுபோல இந்த முறை சமையல் திறமையை வெளிப்படுத்த களம் இறங்கும் குக்குகள் குறித்த விவரமும் ஏற்கனவே வெளியாகி இருக்கிறது. அதில் நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, விஜய் டிவி தொகுப்பாளர் பிரியங்கா தேஷ் பாண்டே, சீரியல் நடிகர் வசந்த், நடிகை ஷபி மற்றும் சமையல் கலைஞர் கிருஷ்ணா மெக்கன்சி உள்ளிட்ட 8 போட்டியாளர்கள் களம் இறங்குவதாக ஆரம்பத்தில் தெரிய வந்திருக்கிறது.
அதைத்தொடர்ந்து இப்போது வெளியாகியிருக்கும் பிரமோவில் ஏற்கனவே இருக்கும் கோமாளிகளான க்ரோஸி சுனிதா புகழ் போன்றவர்களோடு நடிகர் வினோத், சீரியல் நடிகை அன்சிதா, (இவர் செல்லமா சீரியலில் செல்லமாகவா நடித்துக் கொண்டிருக்கிறார்). அதுபோல நடிகை ஷபி என்ற சப்னம் (இவர் சன் டிவியில் தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலம் அடைந்திருந்தார். இப்போது ஜீ தமிழில் மாரி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்).அதுபோல சீரியல் நடிகை கேமி, விஜய் டிவி பிரபலமான ராமர் போன்றோர் இருக்கும் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications