CWC 5: சுஜிதா முதல் சூப்பர் சிங்கர் பூஜா வரை.. இத்தனை புது குக்குகளா? யாரெல்லாம் இருக்காங்க பாருங்க
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கிராண்ட் ஓப்பனிங் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீசனில் எந்த குக்குகள் எல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.
அதில் விஜய் டிவியில் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் "தனம்"ஆக நடித்த நடிகை சுஜிதா முதல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்த பூஜா வரை பல பிரபலங்கள் ஐந்தாவது சீசனில் குக்காக களம் இறங்கி இருக்கிறார்கள். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அதே நேரத்தில் இந்த சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் தற்போது குக்குகளைப் போலவே இந்த முறை ஒரு சில கோமாளிகளும் புதியதாக அறிமுகமாகி இருக்கிறார்கள்.
விஜய் டிவியில் எத்தனையோ ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் அதிகமாக பாப்புலராக இருக்கிறது. இந்த நிகழ்ச்சி இதுவரைக்கும் நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து இருக்கிறது. ஐந்தாவது சீசன் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே பல மாதங்களாக ரசிகர்கள் இருந்தனர்.
இந்த முறை ஐந்தாவது சீசன் பல்வேறு புதுமைகளுடன் அமர்க்களமாக வரும் ஏப்ரல் 27ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது. குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த நான்கு சீசன்களாக வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோர் நண்பர்களாக இருந்தனர். ஆனால் இந்த முறை வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டதால் அவருக்கு பதிலாக புதிய நடுவராக மாதம்பட்டி ரங்கராஜனை களம் இறக்கி உள்ளனர்.
இப்போது வெளியாகியிருக்கும் பிரமோவில் ஏற்கனவே இருக்கும் கோமாளிகளான க்ரோஸி சுனிதா புகழ் போன்றவர்களோடு நடிகர் வினோத், சீரியல் நடிகை அன்சிதா, (இவர் செல்லமா சீரியலில் செல்லமாகவா நடித்துக் கொண்டிருக்கிறார்). அதுபோல நடிகை ஷபி என்ற சப்னம் (இவர் சன் டிவியில் தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலம் அடைந்திருந்தார். இப்போது ஜீ தமிழில் மாரி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்).அதுபோல சீரியல் நடிகை கேமி, விஜய் டிவி பிரபலமான ராமர் போன்றோர் இருக்கும் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
அதைத்தொடர்ந்து இப்போது வெளியான பிரமோவில் யாரெல்லாம் குக்காக கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் சாலின் சோயா, சீரியல் நடிகர் அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, மியூசிக் டைரக்டர் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலமான பூஜாவும் கலந்து கொள்வதாக மூன்றாவது ப்ரோமோவில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதைத்தொடர்ந்து நான்காவது ப்ரோமோவில் யூடியூபர் இர்ஃபான், பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் வசந்த் வசீ, தொகுப்பாளர் பிரியங்கா தேஷ் பாண்டே, VTV கணேஷ் மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீசன் 1 நிகழ்ச்சியில் பிரபலமடைந்த சுஜிதா போன்றோர் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
அதில் தொகுப்பாளர் பிரியங்கா நான் இதுவரைக்கும் மைக்கை பிடித்து தான் எல்லோரும் பார்த்திருப்பீங்க. இந்த நிகழ்ச்சியில் நான் கரண்டியை பிடிக்க போறேன் என்று கலகலப்பாக பேசியிருக்கிறார். இந்த வாரம் ரசிகர்கள் எதிர்பார்த்த குக் வித் கோமாளி ஒளிபரப்பாக இருக்கிறது. பல புதுமையான குக் வித் மற்றும் கோமாளிகளோடு புது கூட்டணி இணைந்திருப்பதால் என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications