சாத்துக்குடியை பிழிவியா.. இல்லை.. ரம்யா பாண்டியன் கிட்ட நல்லா வழிவேன்!
சென்னை: விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி ரியாலிட்டி ஷோவில், ஒரு கூடை சாத்துக்குடியை கொடுத்து, பாலாவிடம் நல்லா பிழிவியான்னு செஃப் தாமோதரன் கேட்க, என்னை விட்டா ரம்யா பாண்டியன்கிட்டே வழிவேன்னு சொல்றார் பாலா.
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆன் தி ஸ்பாட்டில் காமெடி செய்வதும், கோமாளிகள் இடையூறால் அவ்வப்போது காமெடி உதிர்வதும்தான் ஹைலைட். நம்மை அறியாமல் சிரிப்பை வரவழைக்கும் ஒரு நிகழ்ச்சியாக இது இருக்கிறது என்பது உண்மைதான்.
பலரும் இந்த காமெடிக்காகவும், நடிகை ரம்யா பாண்டியனுக்காகவும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இந்த நிகழ்ச்சியை விடாமல் விரும்பிப் பார்த்து வருகிறார்கள். குக்கு வித் கோமாளி ஷோ பார்க்க கொஞ்சம் ரிலாக்ஸாகவும் இருப்பதாக கூறுகிறார்கள்.

செமி ஃபைனல்
இந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்களும் நிகழ்ச்சியின் செமி ஃபைனல் ஒளிபரப்பாக இருக்கிறது. உமா ரியாஸ் நேரடியாக ஃபைனலுக்கு டாஸ்கில் வெற்றி பெற்று தேர்வாகி உள்ளதால், செமி ஃபைனலுக்கு வனிதா விஜயகுமார். பிரியங்கா ரோபோ ஷங்கர், ரம்யா பாண்டியன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இவர்கள் சமைக்கும் விதம்விதமான சமையலை யாரும் கற்றுக்கொள்ள முடியாதபடி செய்முறைகள் காண்பிக்காததுதான் நிகழ்ச்சியின் குறை.

சமையல் போட்டி
ஒரு சமையல் போட்டி என்றால் அதில் காமெடிக்கு இடமில்லை. ஆனால், இங்கு கோமாளிகள் என்று சமையல் தெரியாதவர்களை வைத்துக்கொண்டு அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து சில நிமிடங்கள், அவர்கள் உதவியோடு சில நிமிடங்கள் என்று போட்டியாளர்கள் சமைக்க வேண்டும் என்பதால் நிகழ்ச்சி பார்க்க சுவாரஸ்யமாக இருக்கிறது.இக்கட்டிலும் சமைத்து ஜெயிப்பவர்கள் எனும்போது திறமைக்கு சவால் விடும் போட்டியாகவும் இருக்கிறது.

அட்வான்ஸ் டாஸ்க்
போட்டியில் கோமாளிகளுக்கு அட்வான்ஸ் டாஸ்க் என்று ஒன்று தருகிறார்கள். முறுக்கு பிழிவது, பானி பூரி சாப்பிடுவது என்று போட்டி விதம் விதமாக இருக்கிறது. இந்த வாரம் ஒரு கூடை நிறைய சாத்துக்குடியைக் கொடுத்து பிழிய சொல்லி இருக்கிறார்கள். அப்போதுதான் நீ நல்லா பிழியிவியான்னு செஃப் தாமோதரன் பாலாவிடம் கேட்க, அவர் ரம்யா பாண்டியனிடம் நல்லா வழிவேன்னு சொல்றார்.

ரம்யா பாண்டியன்
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கடைசி வரை இருக்க வேண்டும் என்றுதானோ என்னவோ, இதுவரை ரம்யா பாண்டியன் எலிமினேட் ஆகாமல் இருக்கிறார். நிகழ்ச்சிக்கு இவர் ஒரு கவர்ச்சி அம்சமாக பார்க்கப்படுகிறார். கோமாளிகள் பாலா, புகழ் இருவரும் மட்டும் இல்லாமல் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரக்ஷனுக்கும் இவர்தான் பொழுது போக்கு அம்சம். இவரை சீண்டுவதும், இவரின் கைப்பிடித்து டான்ஸ் ஆடுவது என்பதும் ஒரு எண்டர்டெயின்மெண்ட் இவர்களே ஜொள்ளு விட்டுக்கொண்டு பார்ப்பவர்களை எரிச்சல் அடைய வைக்கிறார்கள்.
அது சரி ரம்யா பாண்டியனும் இதை நன்றாக என்ஜாய் செய்கிறார் எனும்போது எரிச்சல் அடைந்து என்ன!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications