மதுரையை வியந்து பார்க்க வைத்த செஃப் தாமு! அதுவும் 4 நிமிடத்தில் சாதனை! கடைசியில் செய்தது தான் ஹைலைட்
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் செஃப் தாமு மதுரையில் ஒரு தனியார் ஹோட்டலை திறந்து வைத்த போது அங்கு நான்கு நிமிடத்தில் இறாலை சமைத்து எல்லோரையும் அதிசயப்பட வைத்திருக்கிறார். இது குறித்து வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட செஃப் தாமு பெரிய அளவில் பிரபலமடைந்தது என்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் முதல் சீசனில் இருந்து தற்போது நடந்து கொண்டிருக்கும் ஐந்தாவது சீசன் வரைக்கும் நடுவராக இருந்து வருகிறார்.

இவரோடு நான்கு சீசன்களாக வெங்கடேஷ் பட் நடுவராக இருந்த நிலைக்கு இவர்கள் இருவரும் செய்யும் காமெடி மற்றும் சமையலுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதேபோல சமூக வலைத்தளத்திலும் தாமுவிற்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். youtube சேனலில் பலவிதமான சமையல்களை எளிமையாக செய்வது எப்படி என்று இவர் சொல்லிக் கொடுப்பதற்கு பார்ப்பதற்காகவே பாலோவர்ஸ் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இவருடைய வயதையும் மீறி இவர் போடும் டான்ஸ் மற்றும் காமெடி பலருடைய ஃபேவரைட் ஆக இருக்கிறது. அதோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளோடு இவர் செய்யும் ரகளைகளும் பலருடைய மனதை கவர்ந்திருக்கிறது. ஆனாலும் குக் வித் கோமாளி ஐந்தாவது சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பு தான் இந்த சீசனில் இருந்து விலகப் போகிறேன் என்று ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.
பிறகு விஜய் டிவியோடு ஏற்பட்ட பேச்சு வார்த்தையால் அந்த வீடியோவை டெலிட் செய்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது. ஆனாலும் இப்போது இவர் ஐந்தாவது சீசனில் மீண்டும் தொடர்வதால் ரசிகர்கள் பழசை எல்லாம் மறந்து விட்டார்கள் இந்த நிலையில் தான் இன்று மதுரையில் தனியார் ஹோட்டல் ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட செஃப் தாமு அங்கு நான்கு நிமிடத்தில் இறால் சமைத்து அனைவரையும் அதிசயப்பட வைத்திருக்கிறார்.
வீட்டில் பொதுவாக பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி இறாலை எடுத்து சமைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. அதுக்கு மஞ்சள் பொடி போட்டு கிளீன் பண்ணி வெங்காயம், இஞ்சி, பூண்டு எல்லாம் ரெடி செய்து சமையலை முடிப்பதற்குள் பசியில் இருப்பவர்களின் பசியே அடங்கிப் போய் விடுகிறது.
ஆனால் செஃப் தாமு சட்டுபுட்டுன்னு சமையலை முடிச்சு அசத்திய வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (அதில் இன்னொன்றையும் நீங்க நோட் பண்ணனும் மேல சொல்லிய மாதிரி இஞ்சி, பூண்டு ரெடி பண்ணுவதும்.. சரி இறாலை கிளீன் பண்ணுவதும் சரி எதையுமே தாமும் செய்யவில்லை எல்லாமே ரெடியாக இருக்கிறது) அடுப்பை பற்ற வைத்து கடாயை வைத்து ரெடியா இருக்கிற பொருட்களை போட்டு அப்படியும், இப்படியும் வதக்கி சட்டுபுட்டுன்னு சமையலை முடித்து விட்டார்.
ஆனாலும் ஒரு சில ரசிகர்கள், இறாலை அதிகமான நேரம் வேக வைக்க கூடாது... அப்படி அதிகமான நேரம் வேகும் போது அது ரப்பர் போல மாறிவிடும் என்று தெரியும். ஆனால் நான்கு நிமிடத்திற்குள் மசாலா போட்டு இப்படி ஒரு பிரை பண்ண முடியுமா? என்று பலரும் கமெண்ட் செக்ஷனில் கேள்விகளை குவிக்கிறார்கள். அதே நேரத்தில் அந்த வீடியோவின் கடைசியில் தாமு தன்னுடைய குத்து டான்ஸ் போட்டு எல்லோரையும் மிரள வைத்திருக்கிறார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications