“குக் வித் கோமாளி” போட்டியாளர் மனைவியிடம் திவாகர் ஆபாசமாக அப்படி பேசினாரு! அதனால் தான் பிரச்சனை! மாகாபா விளக்கம்
சென்னை : சமூக வலைதளங்களில் "வாட்டர் மெலன் ஸ்டார்" என்று பிரபலமான திவாகர், சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாகாபா, கானா வினோத் மற்றும் புகழ் மூன்று பேரும் தன்னை அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக திவாகர் சொல்லி இருந்த நிலையில் இது குறித்து மாகாபா செய்தியாளர்களிடம் ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார்.

சோசியல் மீடியாவிலிருந்து பிக் பாஸ் வரை
பிசியோதெரபி டாக்டரான திவாகர், நடிகர் சூர்யா போல தர்பூசணி சாப்பிடும் ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர். அதற்குப் பிறகு "வாட்டர்மெலன் ஸ்டார்" என்ற பெயரால் தனக்கே தனி அடையாளம் உருவாக்கிக்கொண்டார்.
அவருக்கு பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்தே அவர் பேசும் விதம், சில சமயம் அதிகப்படியான தற்பெருமை என பல காரணங்களால் கவனம் பெற்றார். அதனால் பலர் அவரைத் திட்டி தீர்த்தனர் ஒரு சிலர் அவருக்கு சப்போர்ட் பண்ணியும் வந்தனர்.
பிக் பாஸிலேயே தொடங்கிய மோதல்கள்
அதே நிகழ்ச்சியில் கானா வினோத் உடன் அவருக்கு அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் ரசிக்கும்படி இருந்த இந்த சண்டைகள், பின்னர் கடுமையான மோதல்களாக மாறின.
"நான் தான் நடிப்பு அரக்கன்" என்று திவாகர் பல இடங்களில் பேசியதும், மற்ற போட்டியாளர்களுடன் பிரச்சனை அதிகரிக்க காரணமாக இருந்தது. இறுதியில், இந்த மோதல்களே அவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றும் நிலைக்கு கொண்டு சென்றது.
குக் வித் கோமாளியில் மீண்டும் மோதல்
பிக் பாஸ்க்குப் பிறகு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக திவாகர் கலந்து கொண்டார். அதே நிகழ்ச்சியில் கானா வினோத் தனது மனைவியுடன் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். மேலும் புகழ் மற்றும் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் ஆகியோரும் அங்கு இருந்தனர். இதற்கான சூட்டிங் நடைபெற்றபோது தான் சர்ச்சை கிளம்பியது.
திவாகர் குற்றச்சாட்டு
சில நாட்களுக்கு முன்பு அதிகமாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார் அதில், குக் வித் கோமாளி சூட்டிங் இடைவேளையில் புகழும், கானா வினோத்தும் தன்னை தரக்குறைவாக பேசியதாகவும், தனது குடும்பத்தையும் இழிவாக பேசியதாகவும், பின்னர் சண்டை ஏற்பட்டதாகவும் சொல்லி இரந்தார்
மேலும், "மாகாபா மதுபோதையில் இருந்தபோது இரும்பு கம்பியால் அடித்தார்" என்ற கடுமையான குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார். இதற்காக அவர் போலீசில் புகார் அளித்ததுடன், பின்னர் கமிஷனர் அலுவலகத்திலும் முறையிட்டுள்ளார். அத்துடன், "சென்னையில் இனி ஷூட்டிங் வர முடியாது" என்று மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மாகாபா ஆனந்த் விளக்கம்
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலாக, மாகாபா ஆனந்த், கானா வினோத் மற்றும் புகழ் மூவரும் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளனர்.
மாகாபா கூறியதாவது, "சூட்டிங் ஸ்பாட்டில் திவாகர் ஒரு போட்டியாளரின் கணவர் முன்னாடியே, அவருடைய மனைவியிடம் தகாத முறையில் பேசியார். 'இத்தனை நாள் உன் புருஷன் கூட வாழ்ந்துட்ட, ஒரு நாள் என் கூட வா என்று அவருடைய தோளில் கை போட்டபடி கேட்கிறாரு' இப்படி கேட்பது காமெடியா? அதுதான் நாங்கள் கேள்வி கேட்டோம்." அவர் மேலும் கடுமையாகக் கூறினார்.
மாகாபா மறுப்பு
தன்னை பற்றி கூறப்பட்ட "மதுபோதையில் இருந்தார்" என்ற குற்றச்சாட்டை மாகாபா கடுமையாக மறுத்தார்."நான் 18 மணி நேரம் நின்று நிகழ்ச்சி நடத்துறவன். குடிச்சிட்டு இருந்தா எப்படி நிகழ்ச்சி நடத்த முடியும்?" "அவர் சொல்றது எல்லாம் உண்மை இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
முந்தைய சர்ச்சை
மாகாபா மேலும் ஒரு முக்கிய விஷயத்தையும் குறிப்பிட்டார், "இதற்கு முன்பு 'அண்டகாசம்' நிகழ்ச்சியிலும் திவாகர் கலந்து கொண்டார் அப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பெண்களிடம் சரியில்லாத முறையில் பேசியதால் அவரை நீக்கினார்கள்."
"அதற்குப் பிறகு இரண்டு மாதம் அவருக்கு எந்த நிகழ்ச்சியும் கிடைக்கவில்லை. இப்போ மீண்டும் வாய்ப்பு கொடுத்ததும் தவறாகிவிட்டது" என்றார்.
சேனல் தரப்பு முடிவு?
இந்த சம்பவத்துக்குப் பிறகு, சேனல் தரப்பில் இருந்து திவாகரை இனி நிகழ்ச்சிகளில் சேர்க்க கூடாது என்ற முடிவும் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications