மாதம்பட்டி ரங்கராஜன் பற்றி வதந்தி பரப்பாதீங்க! கதையையே மாற்றிவிட்ட ஜாய் கிரிஸில்டா
சென்னை: தமிழ் சின்னத்திரையில் சமையல் கலைஞராக வந்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் மாதம்பட்டி ரங்கராஜ். அவருடைய மென்மையான பேச்சும், சிரிப்பும், ரசிகர்களுக்குப் பிடித்திருந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக, ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா கொடுத்த புகாரால், அவருடைய இமேஜ் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஜாய் கிரிஸில்டா கொடுத்த இன்ஸ்டாகிராம் பதிவு, இப்போது வைரலாகி, பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் போஸ்ட்
சமீபத்தில், ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அதில், அவரும், மாதம்பட்டி ரங்கராஜும் மிகவும் பாசத்தோடு கட்டிப்பிடித்து சிரிக்கும் ஒரு போட்டோ உள்ளது. அதை பார்த்தால், ஒரு கப்புள் போல அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது தெரிகிறது.
அந்த போஸ்ட்டில் ஜாய், "என்னை ஒரு தலைப்புக்காக திருமணம் செய்து கொண்டார், பிறகு என்னையும், வயிற்றில் இருக்கும் குழந்தையையும் திரில்லுக்காக கோஸ்ட் செய்துவிட்டார்." என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், வாக்குறுதிகள் எல்லாம் ஆப்ஷனல் என்று நினைத்துக்கொண்டு, அவர் மற்றவர்களுடன் ஃப்ளிர்ட் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். "நீங்கள் என்னை வெறும் கோஸ்ட் செய்யவில்லை, ஒரு குழந்தையின் வாழ்க்கையில் இருந்து ஒரு தந்தையாகவே மறைந்துவிட்டீர்கள். எந்த குற்ற உணர்வும் இல்லை, வெட்கமும் இல்லை. ஒரு தந்தை இருக்க வேண்டிய இடத்தில் வெறும் மௌனம் மட்டுமே" என்று அவர் எழுதியுள்ளார்.
இந்த போஸ்ட் இருவரும் ஒரு பிரைட் ஃபியூச்சரை எதிர்பார்த்து இருந்த நிலையில், அது உடைந்து போனது, ரசிகர்களுக்குப் பெரும் சோகத்தைக் கொடுத்தது.
அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
இந்த இன்ஸ்டாகிராம் போஸ்டுக்கு முன்பு, ஜாய் கிரிஸில்டா காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகாரை அளித்திருந்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர், "கடந்த 2 வருடங்களாக என்ன நடந்தது என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன்" என்று கூறினார்.
அதே நேரத்தில், "திருமணம் செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்ட மாதம்பட்டி ரங்கராஜ் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பார்கள்" என்று அவர் கூறினார். ஒருபக்கம், "மோசடி" என்று சொன்னவர், அடுத்த நொடியே, "உண்மையாகவே மாதம்பட்டி ரங்கராஜ் என்னை திருமணம் செய்து கொண்டார், தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்" என்று தெளிவுபடுத்தினார். இந்த முரண்பட்ட கருத்து, அப்போது பெரிய விவாதப் பொருளானது.
ஆனால், அவர் திருமணம் செய்து கொண்டார் என்ற தனது நிலைப்பாட்டில் ஜாய் உறுதியாக இருந்தார். தன்னுடைய இந்த புகார், வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல என்பதை நிரூபிக்க, அவர் காவல் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் மற்றும் புகைப்பட, வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்ததாக கூறியிருந்தார்.
காவல்துறை விசாரணை
இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் ஜாய் கிரிஸில்லாவிடம் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். நீண்ட விசாரணையில், கடந்த இரண்டு வருடங்களாக நடந்த அனைத்தையும் அவர் விலாவாரியாகத் தெரிவித்துள்ளார்.
"எனக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன். புகார் அளித்த பின்பும் அவர் ஜாலியாக வெளியே சுற்றிக் கொண்டுள்ளார். நிச்சயம் நான் போராடுவேன். என் குழந்தையின் தந்தை அவர் தான்" என்று ஜாய் கிரிஸில்டா உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
அவர், இந்த விஷயத்தில் மீடியா மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் தனக்குக் கிடைத்த சப்போர்ட் குறித்துப் பேசி, தனக்குக் கிடைத்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். இப்போது, இந்த வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜனுடன் இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து ஜாய் வெளியிட்டு வரும் நிலையில், தான் ரொம்பவும் சந்தோஷமாகவே இருக்கிறேன் இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன் என்பதுபோல மாதம்பட்டி ரங்கராஜன் அடிக்கடி போட்டோ சூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எடுத்த சில புகைப்படங்களை பதிந்து இருக்கிறார்.
.
ஒரு பக்கம், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் நல்ல இடத்தைப் பிடித்த ஒருவர், இப்படிச் செய்திருக்க மாட்டார் என்று அவருடைய ரசிகர்கள் நம்புகிறார்கள். இன்னொரு பக்கம், ஒரு பெண்ணின் துயரக் கதைக்கு நீதி கிடைக்க வேண்டும் எனப் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த லீகல் பேட்டிலில், உண்மை என்ன என்பது இனிமேல்தான் வெளிவரும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications