தன்மானம் பற்றி மணிமேகலை பேசலாமா? காரி துப்புனாங்களே அது மறந்து போச்சா? குரோஷி பகீர் வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை தனக்கு தன்மானம் முக்கியம் என்று தான் நிகழ்ச்சியிலிருந்து வந்து விட்டேன் என்று கடந்த வாரம் பதிவு ஒன்று வெளியிட்டு இருந்தார். மணிமேகலையின் இந்த பதிவுக்கு கமெண்ட் போட்டு பிறகு அதே டெலிட் செய்த குரோஷி மணிமேகலை செய்தது தவறு என்கிற ரீதியில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

இணையத்தை திறந்தாலே அங்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலைக்கு ஆதரவா? பிரியங்காவிற்கு ஆதரவா? என்று ஒரு பெரிய போர் நடந்து கொண்டிருக்கிறது. கருத்து மோதல்களில் மணிமேகலை மற்றும் பிரியங்கா பற்றி பலரும் பலவிதமாக திட்டி தீர்த்து வருகிறார்கள். இதில் யார் மீது சரி யார் மீது தவறு என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

vijay tv manimegalai

மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவரும் கல்லூரி பருவத்தில் இருந்தே தொகுப்பாளராக இருக்கிறார்கள். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக இருவரும் தொகுப்பாளராக பயணம் செய்து வரும் நிலையில் மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்த ஒரு தொகுப்பாளர் என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார். நான் வாங்கும் காசுக்கு வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஆனால் என்னுடைய வேலையை தடுத்து அவர் பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். எனக்கு தன்மானம் இருக்கிறது அதனால் அந்த நிகழ்ச்சி வேண்டாம் என்று வந்துவிட்டேன். எனக்கு பணம் காசை விட தன்மானம்தான் முக்கியம், நான் அந்த தொகுப்பாளர் சொன்னது போல செய்ய முடியாது என்று சொன்னதால் என்னை அவரிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். மன்னிப்பு கேட்டால் உங்களுக்கு இன்னும் இரண்டு நிகழ்ச்சிகள் தருகிறோம் என்றும் சொல்கிறார்கள்.

எனக்கு அதெல்லாம் தேவையே இல்லை. எனக்கு திறமை இருக்கிறது எனக்கு தன்மானமும் இருக்கிறது. நான் எப்படியும் வாழ்ந்து விடுவேன் என்று ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். இதுதான் இப்போது ஹாட் டாப்பிக்காக இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. மணிமேகலையை வேலை செய்ய விடாமல் டாமினேட் செய்தது பிரியங்கா தான் என்று இணையத்தில் பலரும் பிரியங்காவை திட்டி தீர்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மணிமேகலை வீடியோ வெளியிட்டதும் அவருக்கு ஆல் த பெஸ்ட் சொன்ன குரோஷி தற்போது ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நானும் இருக்கிறேன். இரண்டு வருடங்களாக மணிமேகலையோடு அந்த நிகழ்ச்சியில் பயணிக்கிறேன். இப்போதுதான் பிரியங்கா அந்த நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிறார். ஆனால் கடந்த சீசனில் மணிமேகலை பாதியில் அந்த நிகழ்ச்சிகளிலிருந்து வெளியேறி இருந்தார்.

vijay tv manimegalai

அது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இப்போ தன்மானம் முக்கியம் என்று சொல்லும் மணிமேகலை கடந்த சீசனில் அதுவரைக்கும் கோமாளியாக இருந்த சிவாங்கி குக்காக வந்ததும் அவரோடு கோமாளியாக தன்னால் வேலை செய்யும் முடியாது என்று அவர் முன்பே நீயெல்லாம் ஒரு குக்கு நான் உனக்கு கோமாளியா இருக்கணுமா? என்று காரி துப்பி பேசினாரே அது எல்லாம் மறந்து போச்சா? அப்போ அவங்களுக்கு தன்மானம் இல்லையா?

அதுபோல இதுவரைக்கும் ரக்சன் தான் தொகுப்பாளராக இருந்தார். கடந்த சீசனில் கோமாளியாக விலகிய மணிமேகலை நம் தொகுப்பாளராக வந்தால் தான் வருவேன் என்று அடம் பிடித்தார் அதற்கு சேனல் தரப்பினரும் சரி என்று சொல்லி இருந்தனர். பிறகு தொகுப்பாளராக வந்த பிறகு ரக்ஷனை விட அதிகமாக மணிமேகலை பேசுகிறாரே அப்போ ஒரு ரக்ஷனுக்கு அது வருத்தத்தை கொடுக்காதா? அவருக்கு தன்மானம் இல்லையா?

ஏன் இப்போ கூட அத்தனை பேர் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கிறார்கள் கோமாளிகள் மற்றும் குக்குகள் மட்டுமல்ல அங்கு லைட்டிங் மேனில் இருந்து இயக்குனர் வரை எத்தனை பேர் இருக்கிறார்கள் அனைவரும் முன்பும் பிரியங்கா பேசியது தவறு என்று அவரை பேசவிடாமல் நிறுத்தினாரே அப்போ பிரியங்காவிற்கு அது அவமானமா இருக்காதா? அப்போ அவருக்கு தன்மானம் இருக்கக் கூடாதா?

சம்பவம் நடந்த அன்று கூட திவ்யா துரைசாமி எலிமினேஷன் என்று அறிவிக்கப்பட்டதும் அவர் எல்லாரிடமும் நான் கிளம்புகிறேன் என்று சொல்லிக்கொண்டு எல்லாருடைய இனிமையான நினைவுகள் பற்றி பேசிக்கொண்டிருந்தார். அப்போது பிரியங்காவை பற்றி பேசியபோது பிரியங்கா பதிலுக்கு திவ்யாவை பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

ஆனால் அதில் குறுக்கிட்ட மணிமேகலை நீங்கள் இப்படி பேசக்கூடாது... ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பிரியங்காவா என்று மக்கள் கேட்கிறார்கள். நீங்கள் பேசக்கூடாது என்று பிரியங்காவை பேச விடாமல் தடுத்தது மணிமேகலை தான். அதனால் மணிமேகலை தன்மானம் பற்றி அவ்வளவு பேசியிருக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று அந்த வீடியோவில் குரோஸி பேசி இருக்கிறார்.

அதோடு தான் எதற்காக மணிமேகலை வெளியிட்ட பதிவுகளுக்கு கமெண்ட் கொடுத்தேன் என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதாவது மணிமேகலை நான் குக் வித் கோமாளியில் இருந்து விலகி விட்டேன் என்று ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதற்கு குரோஸி, "உங்களின் அடுத்த கட்ட நகர்வுக்கு வாழ்த்துக்கள்" என்று ஒரு கமெண்ட் கொடுத்திருந்தார். இந்த கமெண்டுக்கு கீழே பிரியங்காவை பற்றி பலரும் பேசிக்கொண்டு இருந்தார்கள். அதனால் தான் நான் அந்த கமெண்ட் டெலிட் செய்து விட்டேன் என்று அந்த பேட்டியில் குரோஷி பேசியிருக்கிறார்.

இந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது, பிரியங்கா மீது தவறு இல்லை என்றால் எதற்காக குரோஷி மணிமேகலைக்கு ஆதரவாக கமெண்ட் போட வேண்டும்? மணிமேகலை செய்தது தவறு என்று ஒரு சிறு வருத்தம் இருந்தால் கூட இப்போ இவ்வளவு பேசும் குரோஸி அன்று கமெண்ட் போட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆரம்பத்தில் சரியாக யோசித்து அவருக்கு பெரிய மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு பிறகு சேனல் தரப்பினர் கொடுத்த அழுத்தத்தால் குரோஷி இப்படி மாற்றி பேசுகிறாரா? என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். அதோடு இதுவரைக்கும் குரோஷி மீது இருந்த மரியாதை கூட இப்போது குறைந்துவிட்டது. ஈயம் பூசின மாதிரியும் இல்ல, பூசாத மாதிரியும் இல்லை என்றும் கிண்டல் செய்து வருகிறார்கள். ஒரு காலத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஸ்ட்ரெஸ் பஸ்டர் என்று அழைக்கப்பட்டது. ஆனால் இப்போ இந்த நிகழ்ச்சி தான் பெரிய அளவில் அழுத்தத்தை கொடுத்தது இணையத்தில் பேசப்படுகிறது.

ஆரம்பத்தில் குரோஷி மணிமேகலைக்கு சப்போர்ட் கொடுத்து விட்டு இப்போது பிரியங்காவிற்கு ஆதரவாக அவர் விளக்கம் கொடுத்திருப்பது சரி என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லது இது நாடகம் என்று நினைக்கிறீர்களா? உங்கள் கருத்த கமெண்டில் தட்டி விடுங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+