வாட்ஸ்அப்ல அப்படி பேசிட்டு வீடியோவில் இப்படி பேசுறாங்க.. காரணம் பணம்! CWC பிரபலத்தை கிழித்த மணிமேகலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுப்பாளர் மணிமேகலை கடந்த வாரம் சனிக்கிழமையன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டேன் என்று ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதைக் குறித்து விஜய் டிவி பிரபலங்கள் பலரும் அவருக்கு எதிராக பேசிய நிலையில் நேற்று சனிக்கிழமை மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டு பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியதுதான் ஒரு வாரமாக பேசப்பட்டது. மணிமேகலை விலகியத்திற்கு காரணம் பிரியங்கா தான் என்று அவருடைய பெயரை குறிப்பிடாமல் மணிமேகலை வீடியோ வெளியிட்டிருந்தார். அதற்கு பிறகு ரசிகர்கள் பிரியங்காவை திட்டி தீர்த்து வந்தனர். முதல் இரண்டு நாட்கள் அமைதியாக இருந்த விஜய் டிவி பிரபலங்கள் பிறகு பிரியங்காவிற்கு ஆதரவாக தொடர்ச்சியாக வீடியோ வெளியிட்டு வந்தனர்.

television vijay tv manimegalai

இந்த நிலையில் மணிமேகலை நேற்று சனிக்கிழமை தன்னுடைய கணவர் உசேனுடன் சேர்ந்து ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னோடு இருந்த பலர் தனக்கு எதிராக வீடியோ வெளியிட்டதை குத்தி காட்டி பேசி இருக்கிறார். அதில் ஒரு இடத்தில் தன்னுடைய கணவரிடம் நீ எனக்கு எதிரா வீடியோ போடலையா? பல வருஷமா என் கூடவே இருந்தவர், உனக்கு வெல்விஷர் என்று சொல்லிக் கொண்டு இருந்தவர்கள் கூட இன்று எனக்கு எதிரா வீடியோ போட்டுட்டு இருக்காங்க,

அதிலும் வாட்சப்பில் வந்து ஒன்னு பேசிட்டு போறாங்க ஆனா அடுத்த நாளே வீடியோவில் இன்னொன்னு பேசுறாங்க. வாட்ஸப்பில் நம்மிடம் நீ தான் சரி என்று பொறுமையாக பேசுறாங்க நமக்கு வாழ்த்துகளும் சொல்லுறாங்க. ஆனா வீடியோவில் எல்லா தப்பும் நாம தான் செஞ்சோம் என்று பேசுறாங்க. இத்தனை வருஷமா கூடவே இருந்தார்களே இவங்களா இப்படி என்று அதிர்ச்சியாகும் அளவிற்கு மாறிட்டாங்க.

vijay tv manimegalai

கூட இருக்கறவங்களை நம்ப கூடாதுன்னு சொல்லுவாங்க அது இப்போ நிரூபணம் ஆயிடுச்சு. நான் இத்தனை நாளும் மனம் தான் முக்கியம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் இப்போ பணம்தான் முக்கியம், பணம் என்றால் எப்படி வேணாலும் பேசலாம் என்று சிலர் நிரூபிக்கிறாங்க என்று குரோஷியை தாக்கி மணிமேகலை அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

television vijay tv manimegalai

காரணம் குரோஷி மணிமேகலை தான் விலகி விட்டேன் என்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்தபோது அதில் நீ மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் என்று ஒரு கமெண்ட் போட்டு இருந்தார். ஆனால் அந்த கமெண்ட் இரண்டு நாட்கள் கழித்து டெலிட் செய்து விட்டார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு குரோஷி ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் தான் கமெண்ட் போட்டதை தவறாக புரிந்து கொண்ட ரசிகர்கள் அந்த கமெண்ட்டுக்கு பிரியங்காவை திட்டி வந்தனர்.

அதனால் தான் நான் அந்த கமெண்ட்டை டெலிட் செய்து விட்டேன். மணிமேகலை தன்மானம் முக்கியம் என்று சொல்கிறார் ஆனால் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும்போது சிவாங்கி குக்காக வந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவர் முன்பு காரி துப்பி பேசினார். அது தவறு இல்லையா? மணி பிரியங்காவை அத்தனை பேரின் முன்பு பேசவிடாமல் தடுத்தார் அது தவறில்லையா? ரக்ஷனை பேசவிடாமல் மணிமேகலை பேசிக் கொண்டிருக்கிறார் அதெல்லாம் தவறில்லையா? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார்.

television vijay tv manimegalai

இது குறித்து தான் மணிமேகலை கூடவே இருந்துட்டு இப்போ சொம்பு அடிக்கிறியா என்று அந்த வீடியோவில் குரோஷி பெயரை குறிப்பிடாமல் கேட்டிருக்கிறார். இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து குரோஷியை ரசிகர்கள் பலரும் திட்டி வருகிறார்கள். ஏற்கனவே குரோஷி தான் வெளியிட்ட வீடியோவில் என்னை பலர் கழுவி ஊத்தி கமெண்டில் செருப்பால் அடிக்கிறாங்க என்று வீடியோ ஒன்று போஸ்டும் போட்டு இருந்தார். இப்படியான நிலையில் இப்போது மணிமேகலையும் தன்னுடைய வீடியோவில் அவரை தாக்கி பேசி இருக்கிறார்.

television vijay tv manimegalai
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+