டார்கெட் செய்த CWC பிரபலங்கள்.. ஆனால் சேனலிருந்து மணிமேகலைக்கு ஸ்பெஷல் வாய்ப்பு.. இதுதான் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகி இருந்த நிலையில் அதற்கு காரணம் பிரியங்கா தான் என்று மணிமேகலை பதிவு வெளியிட்டிருந்த நிலையில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் மணிமேகலையை டார்கெட் செய்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் மணிமேகலைக்கு விஜய் டிவி தரப்பில் இருந்து புது வாய்ப்பு கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

அதாவது கடந்த சனிக்கிழமை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகி விட்டதாக ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். என்னை அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்த தொகுப்பாளர் வேலை செய்யவிடாமல் தடுக்கிறார். அதனால் அந்த நிகழ்ச்சியில் என்னால் தொடர முடியவில்லை. அதனால் தான் நான் பாதியில் வந்துவிட்டேன் எனக்கு தன்மானம் முக்கியம், சுயமரியாதை விட்டுக் கொடுத்து அந்த நிகழ்ச்சியில் என்னால் இருக்க முடியாது என்று நீண்ட ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.

television vijay tv manimegalai

மணிமேகலை பிரியங்காவின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் அவரை பற்றி தான் மணிமேகலை போஸ்ட் போட்டு இருக்கிறார் என்று இணையத்தில் என ரசிகர்கள் பிரியங்காவை திட்டி தீர்த்து வருகிறார்கள். ஆனால் பிரியங்கா தரப்பில் இருந்து இதற்கு எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. ஆனால் குக் வித் கோமாளி பிரபலங்கள் பலர் பிரியங்காவிற்கு ஆதரவாக இப்போது குரல் கொடுக்க தொடங்கி இருக்கிறார்கள்.

அதோடு விஜய் டிவி பிரபலங்கள் ஒரு சிலரும் பிரியங்காவிற்கு சப்போர்ட் செய்கிறார்கள். ரசிகர்கள் மணிமேகலைக்கு சப்போர்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். மணிமேகலை மற்றும் பிரியங்கா பிரச்சனை இணையத்தில் தொடங்கியதும் இதற்கு முன்பு இருந்த பிரச்சனைகள் எல்லாமே அமைதியாகிவிட்டது. குறிப்பாக கடந்த வாரத்தில் ஹேமா கமிட்டி மற்றும் ஜெயம் ரவியின் விவாகரத்து பிரச்சனை பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் இப்போது அதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை என்று சொல்லலாம்.

பிரியங்காவிற்கு ஆதரவாக குரோஷி, சுனிதா, ஷகிலா, டிஜே பிளாக், சூப்பர் சிங்கர் பூஜா, பாவனி ரெட்டி, அமீர் நிரூப் என்று பலர் வீடியோ வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை பிரச்சனைகள் நடந்து கொண்டிருந்தாலும் விஜய் டிவி தரப்பில் இருந்து மணிமேகலை மற்றும் பிரியங்காவிற்கு இடையே என்ன பிரச்சனை நடந்தது என்ற வீடியோ இன்னும் வெளியிடவில்லை. ஆனால் மணிமேகலை வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசனின் போட்டியாளராக கலந்து கொள்ள போகிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

television vijay tv manimegalai

ஆனால் மணிமேகலையின் பெயரும் இப்போது உபதேச பட்டியலில் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. மணிமேகலை விஜய் டிவியில் பல வருடங்களாக பணியாற்றி இருக்கிறார். ஆனால் இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. அந்த பிரச்சனையை சேனல் தரப்பினரிடம் நான் பேசினேன் ஆனால் அவர்கள் அதற்கு எனக்கு சரியாக தீர்ப்பு வழங்கவில்லை என்று மணிமேகலை கூறி இருந்த நிலையில் மீண்டும் விஜய்டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா? என்றும் கேள்விகள் எழுகிறது. ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மணிமேகலை கலந்து கொள்ளப் போகிறார் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+