"குக் வித் கோமாளி ஸ்கிரிப்ட்!”- கேமராவுக்கு பின்னால் நடக்கும் சம்பவம்! பகீர் தகவலை சொன்ன மோகன் வைத்யா!
சென்னை: தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர், டான்சர் என பன்முகத் திறமையுடன் வலம் வரும் மோகன் வைத்யா, தான் வாடகை வீட்டில் வசிப்பதாகவும், தனது வீட்டு வாடகை எவ்வளவு என்பது குறித்தும் ஒரு ஹோம் டூர் வீடியோவில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி குறித்து ஒரு அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டிருக்கிறார்.

மோகன் வைத்யா - திரைப்பயணம்
1997ஆம் ஆண்டு 'பிரேமி' என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் மோகன் வைத்யா. அதுபோல 'காதலர் தினம்' படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்த அவர், 'சேது' படத்தில் கதாநாயகி அபிதாவின் மாமா கேரக்டரில் நடித்தார். அதன் பிறகு 'பரசுராம், அந்நியன்,வேகம், பஹீரா, மார்க் ஆண்டனி' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்திய திரைப்படம்
கடைசியாக வனிதா விஜயகுமார் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தில் 'ஹாட் அங்கிள்' கேரக்டரில் நடித்திருந்தார். நிலையில் மோகன் வைத்யா ஒரு பேட்டியில் தனது மனைவி மற்றும் மகனுக்குக் காது கேட்காது, வாய் பேச முடியாது என்றும் தனது மருமகளுக்கும் இதே நிலைதான் என்றும் கூறியிருந்தார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
மர்மதேசம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ள மோகன் வைத்யா, விஜய் டிவியின் 'பிக்பாஸ்' மற்றும் 'குக் வித் கோமாளி' உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் 3வது வாரத்தில் வெளியேறிய அவர், 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் 3வது சீசனில் 28 நாட்கள் வீட்டில் இருந்தார். இதுபோல சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பார்க்கவியின் அப்பாவாக நடித்திருந்தார். ஆனால் சமீபத்தில் அவர் இறந்தது போன்று கதை போய்க் கண்டிருக்கிறது.
சுவாரசியமான பேட்டி தகவல்கள்
கலாட்டா பிங்க் யூடியூப் சேனலில் ஹோம் டூர் வீடியோவில் பேசிய மோகன் வைத்யா, தான் வாடகை வீட்டில் இருப்பதாகவும் மாதம் ரூ.12 ஆயிரம் வாடகை கொடுப்பதாகவும் கூறியுள்ளார். அதோடு தான் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் பற்றி பேசும்போது, "குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் செய்யப்பட்டதுதான். உங்களை பார்க்க வைப்பதற்காக இப்படி செய்கிறார்கள், அதை யாரும் நம்பி விட வேண்டாம். அத்தனையும் பொய்தான். நன்றாக பார்த்து என்ஜாய் பண்ணுங்க" என்று மோகன் வைத்யா பகிரங்கமாக பேசியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி
"பிக்பாஸ் ஸ்கிரிப்ட் இல்லை. எங்கள் சீசன்தான் பெஸ்ட். இதில் கோபம், அன்பு, காதல், அபக்ஷன் என அனைத்துமே இருந்தது" என்று அவர் கூறியுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல்கலாம் முன்னிலையில் பாடல் பாடியது, கிரிக்கெட் வீரர் தோனியுடன் செல்பி எடுத்துக்கொண்டது குறித்தும் மோகன் வைத்யா பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications