ப்ளீஸ் அதை ஸ்டாப் பண்ணுங்க.. உண்மையான காரணம் இதுதான்! மீண்டும் விளக்கம் கொடுத்த மணிமேகலை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகிய பிறகு அது பற்றிய செய்திகள் இணையத்தில் அதிகமாக இருக்கும் நிலையில் மணிமேகலை பற்றியும் தன்னுடைய கணவர் பற்றியும் பரவி வரும் வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
கடந்த சனிக்கிழமை எபிசோடில் மணிமேகலை பாதியில் விலகியது தெரியவந்த நிலையில் அது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். அப்போது மணிமேகலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டிருந்தார். தன்னை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக வந்த தொகுப்பாளர் வேலை செய்ய விடாமல் தடுக்கிறார். அவருக்கு கீழே எல்லோரும் இருக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார்.

அந்த சேனலில் பல வருடங்களாக அவர் இருப்பதால் எல்லா இடத்திலும் அவர்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று பல விஷயங்களை அதில் பகிர்ந்து இருந்தார். இது இணையத்தில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. பிரியங்காவை தான் மணிமேகலை குறிப்பிடுகிறார் என்று பிரியங்கா உட்பட எல்லோருக்குமே தெரியும் வகையில் மணிமேகலை அந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
அதே நேரத்தில் பிரியங்காவின் ரசிகர்கள் பலரும் மணிமேகலைக்கு எதிராகவும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். ஏற்கனவே கடந்த நான்காவது சீசனில் கோமாளியாக இருந்த மணிமேகலை திடீரென்று நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டேன் என்று பதிவு வெளியிட்டிருந்தார். அதற்கு காரணம் சிவாங்கி அதுவரைக்கும் கோமாளியாக இருந்து நான்காவது சீசனில் குக்காக மாறியதை மணிமேகலையால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அதனால் தான் அவர் இப்படி முடிவெடுத்தார் என்று கூறப்பட்டது.
ஆனால் அந்த நேரத்தில் மணிமேகலை மற்றும் சுனிதாவிற்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் தான் மணிமேகலை நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். பிறகு நான் இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்றால் கோமாளியாக வர மாட்டேன் தொகுப்பாளராக வருவேன் என்று கேட்டுக்கொண்டதால் அதற்கு சேனல் தரப்பும் சம்மதம் தெரிவித்ததால் தான் தொடர்ந்தார் என்று கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க தற்போது மணிமேகலை விலகியது சரி என்று சிலர் சொல்கிறார்கள். சிலர் மணிமேகலைக்கு வேறு சேனலில் வாய்ப்பு கிடைத்ததால் பிரியங்கா மீது பழி சொல்கிறார் என்று கூறி வருகிறார்கள்.
இப்படி இணையத்தில் பெரும் கருத்து மோதல்கள் போய்க்கொண்டிருக்கிறது அதே நேரத்தில் மணிமேகலை சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு என்னை பற்றி பலரும் பலவிதமாக கருத்து சொல்லி வருகிறார்கள். ஆனால் நான் எனக்கு ஒரு இடத்தில் கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்ய முடியாமல் தொந்தரவுக்கு வந்ததால்தான் நான் அந்த நிகழ்ச்சிகளில் இருந்து வெளியே வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதுபோல ஆரம்பத்தில் நானும் என்னுடைய கணவர் உசேனும் கல்யாணம் செய்ததும் இது லவ் ஜிகாத் என்று சிலர் சொல்லி வந்தார்கள்.

இந்த திருமணம் அதிக நாட்கள் நிலைக்காது மணிமேகலை முஸ்லிம் மதத்திற்கு மாறிவிடுவார் என்றெல்லாம் சொல்லி வந்தார்கள். ஆனால் என்னுடைய கணவர் என்னை மதம் மாற்ற முயற்சி செய்யவே இல்லை. எனக்கு எல்லா கடவுளும் ஒன்று என்பதால் நான் மசூதிக்கு போவேன் அதுபோல அதிகமாக கோவிலுக்கும் போவேன். என்னோடு என்னுடைய கணவர் எனக்கு எப்போதுமே துணையாக இருக்கிறார்.
அதனால் எனக்கு எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதை பார்த்துக் கொள்ளலாம் என்று அவர்தான் எனக்கு நம்பிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் எங்கள் திருமண வாழ்க்கை நான்கு மாதத்தில் முடிந்துவிடும் என்று சிலர் சொன்னார்கள். அதற்கு பிறகு நான்கு வருடம் ஆனதும் 10 வருடத்திற்குள் முடிந்து விடும் என்று சொன்னார்கள். அதைப் பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படுவதே கிடையாது. சொல்றவங்க என்னவோ சொல்லிட்டு போங்க நாங்க எங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு இருக்கிறோம் அவ்வளவுதான். ஆனால் ப்ளீஸ் நடக்காத விஷயங்களை பரப்பாதீர்கள்.. என்று அந்த பேட்டியில் மணிமேகலை பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications