அடப் புகழே.. ரேகாவையும் இவன் விடமாட்டேங்கறான்..இல்லப்பா ரேகா மேம்தான் இவனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில், கோமாளி புகழ், குக்காக பங்கேற்கும் நடிகை ரேகாவுக்கு ஜோடியாக வந்தார். புகழ் ரேகாவை கட்டிக்கொள்ள, ரேகாவும் சந்தோஷமாக ஆர்ப்பரித்தார்.

உள்ளே இருந்த கோமாளி மணிமேகலை உடன் இருந்த கோமாளி சிவாங்கியிடம் ஏய் இவன் ரேகா மேமையும் விட மாட்டான் போலிருக்குடி என்று சொல்ல, இல்லை ரேகா மேம்தான் அவனைன்னு சொன்ன சிவாங்கி.. ஐயையோ இதை எடிட் பண்ணிருங்க என்று சொல்கிறார்.

இப்படி கோமாளிகள் எதையாவது பேச, குக்குகள் வழக்கமாக கோமாளியின் லீலைகளை சகித்துக்கொண்டு சமையலை கவனிக்க என்று குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி செம ஜாலியாக ஒளிபரப்பாகி வருது.இப்போது போட்டியில் இருந்து வெளியேறியவர்களுக்கான சிறப்பு ரவுண்ட்.

 பிரியங்கா ரேகா

பிரியங்கா ரேகா

இதில் எலிமினேஷன் ஆகி வெளியேறியவர்கள் இப்போது மீண்டும் என்ட்ரி ஆகி இருக்கிறார்கள். நடிகை ரேகா, பிரியங்கா ரோபோ சங்கர், தட்டி தாடி பாலாஜி, மோகன் வைத்யா ஆகியோர் கலந்துக் கொள்கிறார்கள். இதில் வெற்றி பெறும் போட்டியாளர் ஃபைனலிஸ்ட்டுகளுடன் சமைக்கும் வாய்ப்பை பெறுவார்கள். ரம்யா பாண்டியன், உமா ரியாஸ், வனிதா விஜயகுமார் ஏற்கனவே ஃபைனலிஸ்ட்டில் இருக்கிறார்கள்.

 புகழ் ரேகா

புகழ் ரேகா

டேபிளில் இருக்கும் ஜூஸில் ஒன்றை எடுத்துக் குடித்தால், அந்த ஜூஸுக்கு யார் கோமாளியோ, அவர் இவருக்கு கோமாளியாக வருவார். அப்படி ரேகா ஒரு ஜூஸை எடுத்துக் குடிக்க, அதற்கு புகழ்தான் கோமாளியாக வந்தார். புகழ் சோகமாக வர இவன் எதுக்கு சோகமா வர்றான்னு கேட்கறார் ரம்யா. அதற்கு உமா ரியாஸ் அவங்க அடிப்பாங்கப்பாஎன்று சொன்னார்... ரேகா மேம் எலினேஷன் ஆகி போன பிறகும், என்னை திட்டி திட்டி மெசேஜ் அனுப்பினாங்க என்று சொன்னார் மணிமேகலை.

 நல்லா சமைக்கலாண்டா

நல்லா சமைக்கலாண்டா

புகழ் தாமோதரனிடம் இவங்க என்னைத் திட்டமாட்டாங்கன்னு சத்தியம் பண்ணுங்க.. இல்லேன்னா நான் அப்படியே ரூமுக்கு போயிடறேன்னு சொன்னார். ரேகா புகழிடம் போயி ஏய் நீ எனக்கு சத்தியம் பண்ணு, என்னை ஜெயிக்க வைப்பேன்னு என்று கேட்க, கூலான புகழ் ரேகாவை கட்டிக்கொண்டார். இவன் ரேகாக்காவையும் விட மாட்டேன்கிறான் என்று உள்ளே இருந்த மணிமேகலை சொன்னார்.

 ஐயோ எடிட் பண்ணிருங்க

ஐயோ எடிட் பண்ணிருங்க

அதற்கு சட்டென்று பதில் அளித்த சிவாங்கி, இல்லை ரேகாக்காத்தான் அவனை என்று சொல்ல வந்த விஷயத்தை சொல்லாமல் வாயை மூடிக்கொண்டார். பிறகு..ஐயையோ இதை எடிட் பண்ணிருங்க என்றும் சொன்னார். பரவாயில்லை என்ன சொல்ல வேண்டும், என்ன சொல்லக் கூடாது என்று கூட கோமாளி சிவாங்கிக்கு தெரிந்து இருக்கிறதே என்று சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+