அதுக்கு மட்டும் அவங்க காரணம் இல்லையா? CWCயில் இருந்து வெளியேற்றப்பட்ட ராஜ் ஐயப்பன் கேள்வி
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் ராஜ் ஐயப்பன் எலிமினேஷன் ஆகி இருந்தார்.
எலிமினேஷன் ஆன பிறகு முதல்முறையாக தனக்கு இதுவரைக்கும் ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி கூறி ராஜ் ஐயப்பன் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் குக் வித் கோமாளியில், கோமாளிகள் குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

நான்காவது சீசன்
விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதன் அடிப்படையில் தான் தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தச் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலே தங்களுக்கு அதிகமான வாய்ப்புகள் வந்து குவிந்துவிடும் என்று ஒவ்வொரு சீசனிலும் பல புது புது குக்குகள் கலந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இந்த நான்காவது சீசனிலும் பலர் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவர் தான் ராஜ் ஐயப்பன் அவர் நடிகர் அஜித் குமாரின் தம்பியாக நடித்திருந்தார்.

எதிர்பாராத வெளியேற்றம்
இந்த நிலையில் எதிர்பாராத விதமாக கடந்த வாரம் நான்காவது எலிமினேஷன் ஆக ராஜ் ஐயப்பன் வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்ட பிறகு முதல் முறையாக இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் நான்தான் இந்த வாரம் வெளியேறினேன். இந்த நிகழ்ச்சியில் நான் நிறைய கத்துகிட்டேன். நானும் இந்த குக் வித் கோமாளியின் ரசிகன் தான். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு எந்த பப்ளிக் பிளேஸ்க்கு போனாலும் பலரும் என்னிடம் விஷ் பண்ணுகிறார்கள். இது நான் எதிர்பார்க்காதது தான் என்று கூறி, தனக்கு இதுவரைக்கும் ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி கூறியிருக்கிறார்.

நன்றி மழை
அதுமட்டுமில்லாமல் நான் இந்த மாதிரி நன்றி கூறி பல நடிகர்கள் பேசிக்கொண்டு இருக்கிறேன். அதேபோல நான் பேசும்போது எனக்கே கூச்சமாக இருக்கிறது. நான் இந்த நிகழ்ச்சியில் இருக்கும்போது எனக்கு இந்த நிகழ்ச்சியில் பலரும் உதவி செய்தார்கள். எனக்கு அடிக்கடி மோட்டிவேஷனல் ஆக இருந்தார்கள். அதில் குரோஷி அண்ணா என்கிட்ட வந்து பேசுவாரு. வேற டேபிளில் இருந்தாலும் கூட எனக்கு வந்து அடிக்கடி மோட்டிவேஷனலாக பேசுவாரு. ரக்சன் அண்ணா உங்களுக்கு பெரிய நன்றி. நான் பேசாத டைம்ல பேசி என்னை என்கரேஜ் பண்ணி இந்த சின்ன டைம்ல எங்களை இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்தது என்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல கோமாளிகளுக்கும் இவர் நன்றி கூறியிருக்கிறார்.

கோமாளிகள் பற்றிய கேள்வி
அந்த வகையில் மேலும் இந்த நிகழ்ச்சியில் ஹீரோ மற்றும் வில்லன் எல்லாமே கோமாளிகள் தான், ஒரு குக் நல்ல சமைத்தால் அதற்கு கோமாளிகள் தான் காரணம். ஆனால் நல்ல சமைக்கலை என்றால் அவங்க காரணமாக இருக்க மாட்டாங்க. கோமாளிகள் செய்யும் சின்ன சின்ன செயல்களால் மட்டும்தான் நம்மளுக்கு அதிகமான ரீச் கிடைக்கும். நம்மளை அதிகமாக பிரபலமாக்குவது கோமாளிகள் தான். நான் பெருசா யாரிடமும் பேசமாட்டேன். ஆனால் இந்த ஷோவிற்கு வந்ததற்கு பிறகு நிறைய பேர் கிட்ட பேச ஆரம்பித்து இருக்கிறேன் என்று ஒரே நன்றி மழைகளை பொழிந்து கொண்டிருக்கிறார். தற்போது இந்த வீடியோவிற்கு குக் வித் கோமாளி பிரபலங்கள் பலரும் தொடர்ந்து வாழ்த்துக்களை கூறிவரும் நிலையில் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications