ஒரே பாட்டு மூலமாக...கிரஸ்ஸாக வலம் வந்தவர்...குக் வித் கோமாளியில் அறிமுகம்.. இனி இவர் தான் அவரா??
சென்னை: வெள்ளித்திரையில் இருந்து தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அறிமுகமாகியிருக்கும் ரசிகர்களின் சாக்லேட் பாய்க்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.
ஒரே பாட்டு மூலமாக ஏற்கனவே பிரபலமடைந்த இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக மேலும் பிரபலமடைய போகிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அனைத்து தரப்பினரையும் கவர்ந்த நிகழ்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இரண்டு சீசன்களில் முடிவடைந்த ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கவர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் வரும் காமெடி மற்றும் சமையல் நிகழ்ச்சிகளை தொடர்ந்து ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். சின்னத்திரையில் அழுகாச்சி சீன்களை பார்த்து வெறுத்துப் போயிருந்த ரசிகர்களுக்கு இந்த நிகழ்ச்சியை கிடைத்த வரப்பிரசாதம் என்று பலர் கூறி வருகின்றனர். இதில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் புகழின் உச்சத்தில் வளர்ந்து வருகிறார்கள்.

கனா பட கதாநாயகன்
தற்போது மூன்றாவது சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் விவரங்கள் வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் கனா படத்தின் மூலமாக பிரபலமடைந்த தர்சன் இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகமாகிறார். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்று சொன்னதும் பல ரசிகர்கள் இவருக்கு ஆதரவு கொடுக்க ஆரம்பித்து விட்டனர். ஏற்கனவே பெண்களில் சாக்லேட் பாயாக இருக்கும் இவருக்கு மேலும் ரசிகர்கள் அதிகரிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

கனா திரைப்படத்தில் கிடைத்த வாய்ப்பு
தர்சன் என்று சொன்னால் அந்த அளவிற்கு பிரபலம் ஆகாமல் இருந்த இவர் கனா படத்தின் மூலமாகத்தான் பலருடைய மனதையும் கவர்ந்து இருக்கிறார். இந்த திரைப்படத்தில் இவர்தான் ஆரம்பத்தில் நடிக்கப்போகிறார் என்று தெரியாமத்தான் இருந்துள்ளது. இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயனின் நண்பனாகவும், தம்பியாகவும் கூடவே இருந்து வந்துள்ளார் .ஒரு முறை கனா திரைப்படத்தைப் பற்றி சிவகார்த்திகேயனுடன் படக்குழுவினர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது எதார்த்தமாக கார் சாவியை எடுப்பதற்காக ஆபீஸ் வந்துள்ள தர்சனை பார்த்ததும் படக்குழுவினரும், சிவகார்த்திகேயனும் இவரையே பேசாமல் ஹீரோவா போடலாம் என்று பேசி இருக்கின்றனர்.

ஏற்கனவே பழக்கம் இருக்கின்றது
தர்சனை பார்த்து ஆரம்பத்தில் பலர் இவரை கேரளாவை சேர்ந்தவராக இருப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர் காலேஜ் படிப்பை முடித்துவிட்டு பெங்களூரில் வேலை செய்து கொண்டிருக்கும்போது தான் இவருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசையால் சிவகார்த்திகேயனை வந்து பார்த்திருக்கிறார். சிவகார்த்திகேயன் ரக்சனின் க்ளோஸ் பிரண்டோட ஃப்ரெண்டு தான். அதனால் இவர்களுக்கு இருவருக்கும் ஏற்கனவே அதிகமாக பரிச்சயம் இருந்ததால் இவரை பார்ப்பதற்காக சென்னை கிளம்பி வந்துள்ளார்.

பலரையும் கவர்ந்த பாடல்
தர்சன் முதல்முறையாக ரஜினிமுருகன் திரைப்படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமாகி இருக்கிறார். இந்த திரைப் படத்தில் சிவகார்த்திகேயனின் தம்பியாக கடைசி சீனில் பணத்தைக் கொண்டுவரும் நபராக தான் தர்சன் அறிமுகமானார். அதற்குப் பிறகு கனா திரைப்படத்தில் பலருடைய க்ரஸ்ஸாக மாறிவிட்டார் .அதற்குப் பிறகு இவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் அந்த அளவிற்கு பெயர் வாங்கவில்லை என்றாலும், இவர் நடித்த ஒத்தையடி பாதையிலே தாவி ஓடுற பாடல் பலருடைய ஃபேவரைட் பாடலாக இப்ப வரைக்கும் இருந்து வருகிறது .இந்த நிலையில் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்ற செய்தியை கேட்டதும் ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.இனி இவருடைய காட்டில் நல்ல மழைதான் என்றும் கூறிவருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இவர் இனி அஸ்வினை போல பெண் ரசிகர்களை கவர்ந்து விடுவாரா??என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
-
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம்












Click it and Unblock the Notifications