அவர் வந்து விட்டார்.. சிவாங்கியை காணவில்லையே என தேடும் ரசிகர்கள்.. இதுதான் காரணமாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இந்த வாரம் ப்ரோமோ ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

ப்ரோமோவில் சிவாங்கியை மட்டும் காணவில்லையே என்று ரசிகர்கள் தேடி வருகிறார்கள்.

மூன்றாவது சீசன் தொடக்கம்

மூன்றாவது சீசன் தொடக்கம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது 3வது சீசன் தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு ரசிகர்கள் பலர் இந்த நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்று ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்தனர். தற்போது இந்த மூன்றாவது சீசன் தொடங்கி இரண்டு வாரங்கள் மட்டுமே ஆகின்றது. இந்த நிலையில் ரசிகர்கள் பலருக்கும் ஃபேவரட் கோமாளியாக இருக்கும் சிவாங்கியை இந்த வாரத்தில் காணவில்லை என்று அவருடைய ரசிகர்கள் தேடி வருகின்றனர்.

திறமைக்கு கிடைத்த வெற்றி

திறமைக்கு கிடைத்த வெற்றி

சிவாங்கி ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பாட்டுப்பாடி தன்னுடைய திறமையை வெளிகாட்டுவதற்காக அறிமுகமானார். ஆனால் அவருக்கு அந்த மேடை சரியாக பயன்படவில்லை என்றாலும் அதற்கு அடுத்ததாக குக் வித் கோமாளி மேடை இவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு கொடுத்து வெற்றி பெற செய்து விட்டது. இவருடைய பாடல் திறமையை ஜொலிக்காத அதே விஜய் டிவியில் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருடைய பாட்டு பலரையும் கவர்ந்துள்ளது.

சிவாங்கியை காணவில்லை

சிவாங்கியை காணவில்லை

தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு காலூன்றியிருக்கும் இவர் பாடகியாகவும், நடிகையாகவும் மாறி இருக்கிறார். ஆனாலும் தனக்கு பெயரையும், புகழும் தந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டுவிடாமல் மூன்றாவது சீசனில் இவர் கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் இந்த வார எபிசோட்டின் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் சிவாங்கி இடம் பெறவில்லை. இது அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஆக இருந்துள்ளது. இதனால் சிவாங்கி எங்கே என்று பலரும் கமெண்டுகளில் கேட்டு வருகின்றனர். ஆனால் அவர் எதற்காக இதில் கலந்து கொள்ளவில்லை என்ற காரணம் தற்போது ரசிகர்களுக்கு ஆறுதல் கொடுத்துள்ளது.

இதுதான் காரணமாம்

இதுதான் காரணமாம்

இந்த வாரம் சிவாங்கி ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் கலந்து கொள்ளவில்லையாம். ஆனால் அடுத்த வாரம் அவர் கலந்து கொள்வார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த வாரம் புகழ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் சிவாங்கியும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், சிவாங்கி முன்னேற்றத்திற்கான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் அவரை விரைவில் கதாநாயகியாக பார்க்கலாம் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு இருந்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+