குக் வித் கோமாளியில் வைல்ட் கார்டில் வந்து வெற்றி பெற்ற பிரபலம்..? குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 4 ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த வாரம் இந்த நிகழ்ச்சியின் செமி ஃபைனல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதில் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் பலர் கலந்து கொண்டிருக்கின்றனர். அதாவது இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி போனவர்கள் மீண்டும் வைல்ட் கார்ட் ஆக கலந்து கொண்டு இருக்கின்றனர்.
அதுபோல இந்த வாரமும் இந்த நிகழ்ச்சியை மணிமேகலை தான் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதிகமான ரசிகர்கள் கொண்ட நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சியாக தான் இருக்கும். ஜாலியான சமையல் நிகழ்ச்சியாக இருப்பதாலே பலருக்கும் பிடித்திருக்கிறது.
இதில் கோமாளிகள் செய்யும் சேட்டைகள் மற்றும் நடுவர்களின் கலகலப்பான கண்டிப்புகள் எல்லாமே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல தரப்பினராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. அதனால்தான் தற்போது நான்காவது சீசனில் அடி எடுத்து வைத்து அதுவும் இப்போது முடிவுக்கு வரும் நிலையில் வந்திருக்கிறது.
இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த நான்காவது சீசன் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரம் செமி பைனல் நடைபெற்று இருக்கிறது. இதில் ஏற்கனவே நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆன போட்டியாளர்கள் மீண்டும் வைல்ட் கார்ட் போட்டியளராக வந்திருக்கின்றனர். அவர்கள் செலக்ட் செய்யும் உணவுப் பொருட்களை யார் நமக்கு டஃப் என்று நினைக்கிறார்களோ அவர்களுக்கு கொடுத்து சமைக்க வைக்கிறார்கள்.
அந்த வகையில் இந்த வாரம் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வந்த ஆண்ட்ரியன் வெற்றி பெற்றதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ஆண்ட்ரியன் பலமுறை சமையலில் அசத்தியிருக்கிறார். சிறப்பான பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார். அந்த வகையில் இந்த முறை அவர் வெற்றி பெற்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
அதுபோல தற்போது செமி ஃபைனல் போட்டிக்கு சிவாங்கி, மைம் கோபி, விசித்ரா, ஸ்ருஷ்டி மற்றும் கிரண் ஆகியோர் முன்னேறி இருக்கும் நிலையில் யார் இந்த சீசனில் டைட்டில் வின்னர் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே சிவாங்கி தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் கூறிவரும் நிலையில் விசித்திரா ஜெய்ப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications