விளையாட்டு வினையானது.. திமிராக பேசிய சிவாங்கிக்கு எதிராக மாறிய செஃப்..எதிர்பாராத வெளியேற்றம்
சென்னை: குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் ஏப்ரல் 14 மற்றும் 16ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் செஃப் கொடுத்த டாஸ்கை தன்னால் செய்ய முடியாது என்று சிவாங்கி மறுத்துக் கொண்டிருக்கிறார்.
சிவாங்கி செய்த செயலால் செஃப் தாமு திட்டுகிறார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக கோமாளியாக பிரபலமடைந்த சிவாங்கிக்கு தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமான நெகட்டிவ் கருத்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் நிகழ்ச்சியிலும் அவர் செய்த செயல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுவரைக்கும் கோமாளியாக மூன்று சீசனுக்கு தொடர்ந்து வந்த சிவாங்கி தற்போது முதல்முறையாக குக்காக அறிமுகம் ஆகி இருக்கிறார். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே சிவாங்கி குறித்து சமூக வலைத்தளத்தில் அதிகமான கருத்துக்கள் குவிந்து வருகிறது. இந்த சீசனின் டைட்டில் வின்னர் சிவாங்கி தான் அதற்காகத்தான் விஜய் டிவி செயல்படும் என்றெல்லாம் பலர் குற்றங்களை சுமத்தி வருகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேறும் போதெல்லாம் இது சிவாங்கிக்காக தான் நடக்கிறது என்றும் சில தகவல்களை பரப்பி வருகிறார்கள். கடந்த வாரத்தில் கூட வி ஜே விஷால் வெளியேறும் போது சிவாங்கியால் தான் அவரை வெளியேற்றுகிறார்கள் என்றெல்லாம் பல்வேறு செய்திகள் பரவி வந்தது. அதற்கு சிவாங்கி விளக்கமும் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் இந்த வாரத்தில் இம்யூனிட்டி ரவுண்டு நடைபெற இருக்கிறது. அதில் ஏற்கனவே மூன்று சீசன்களாக கலந்து கொண்ட மூன்று குக்குகள் இந்த சீசனில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் ஜெயித்தால் இங்கே இருக்கும் போட்டியாளர்களில
மதிப்புகள் பறிக்கப்படும் என்றும் இந்த வாரம் கூறப்பட்டிருக்கிறது. அதனால் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இந்த நிலையில் இந்த வாரம் நிகழ்ச்சியில் ஒரு சின்ன ட்விஸ்ட் வைப்போமா என்று வைத்து இருக்கின்றனர். அதில் பழைய போட்டியாளர்கள் எழுதி வைத்திருக்கும் பெயர்களை வைத்து இப்போதைய குக்கள் சமையல் செய்ய வேண்டும். அதில் ஷகிலா எழுதி வைத்திருந்த பாகற்க்காய் பெயரை சிவாங்கி எடுக்க இந்த வாரம் சிவாங்கி பாகற்காயில் தான் சமைக்க வேண்டும் என்று செஃப் கூறுகிறார்.

அப்போது தன்னால் இதை செய்ய முடியாது என்று சிவாங்கி மறுக்க, அதற்கு செஃப் தாமு நீங்க வந்து இருக்கிறது போட்டிக்கு வந்து இருக்கீங்க. எது வந்தாலும் அக்செப்ட் பண்ணுற குணம் வந்து இருக்க வேண்டும் என்று சொல்ல, அதற்கும் சிவாங்கி முடியாது என்று தலையை ஆட்டிக் கொண்டு இருக்க, அப்போது ஏற்கனவே 15வது வாரத்தில் வந்து நின்று கொண்டு இது போல் சொல்வது சரியாக இருக்கா? இது ஒரு போட்டி, இதில் எதைக் கொடுத்தாலும் சமைக்க வேண்டும். என்று சொல்ல சிவாங்கி அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications