குக் வித் கோமாளி சீசன் 4 இறுதி கட்டத்தில் பிரபலங்கள் வாங்கிய சம்பள விவரம்..யாருக்கு அதிகம் தெரியுமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் இறுதி கட்டத்தில் பிரபலங்கள் வாங்கிய சம்பள விபரங்கள் வெளியாகி இருக்கிறது.
அதில் எந்தப் போட்டியாளர் அதிகமான சம்பளம் வாங்கி இருக்கிறார் என்றும் யார் குறைவாக சம்பளம் வாங்கி இருக்கிறார் என்றும் விவரங்களை பார்க்கலாம்.
விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி கலகலப்பாக இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் ரசிகர்களின் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு இருக்கும் ஆதரவு காரணமாகவே தற்போது இந்த நிகழ்ச்சி நான்காவது சீசனில் ஒளிபரப்பாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இந்த நிகழ்ச்சி தான் அதிகமான ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் நான்காவது சீசன் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட நிலையில், இப்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
அதே நேரத்தில் சீசனின் கடைசி கட்டத்தில் மைம் கோபி, கிரண், ஷிவாங்கி, ஸ்ருஷ்டி, விசித்ரா மற்றும் ஆண்ட்ரியன் என ஆறு போட்டியாளர்கள் இறுதி கட்டத்திற்கு தேர்வாகி இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த சீசனில் டைட்டிலை மைம் கோபி தான் வெற்றி பெற்று இருக்கிறார் என்று தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. அதே நேரத்தில் இந்த சீசனில் இறுதி கட்டத்தில் போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், இதில் கலந்து கொண்ட குக்குகள் ஒரு எபிசோடுக்கு வாங்கிய சம்பள விவரங்களும் தற்போது வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில் சிவாங்கி 20000, விஜே விஷால் 25000, ராஜ் ஐயப்பா 26000, விசித்திரா 30000, ஷெரின் 35000முன் ஸ்ருஷ்டி மற்றும் ஆண்ட்ரியன் 30000, மைம் கோபி 40000 முதல் 50000 வரைக்கும் வாங்கிக் கொண்டிருந்தார் என்று சில தகவல்கள் பரவி வருகிறது.
இந்த நிலையில் இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். அந்த ப்ரோமோ வெளியாகி கொண்டிருக்கிறது. அதில் பல பிரபலங்கள் தங்களுடைய சோகம் மற்றும் சந்தோஷங்களை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் உறுதியாக யார் ஜெயித்தது என்ற தகவலை தெரிந்து கொள்வதற்காக ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications