ஒரு படம் ஹிட்டானால் உடனே இப்படி பண்ணிடனுமா? CWCஇல் புகழ் செய்த செயல்.. மெய்சிலிர்க்கும் ரசிகர்கள்
குக் வித் கோமாளி செட்டில் புகழ் இந்த வாரம் காந்தாரா திரைப்படத்தில் வரும் சாமி கெட்டப் போட்டு வந்திருப்பதால் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்
சென்னை: குக் வித் கோமாளி சீசன் 4 பிப்ரவரி 25ஆம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரைக்கும் உள்ள நான்காவது பிரமோ வெளியாகி இருக்கிறது.
இந்த வாரத்தில் கோமாளிகள் புதியதாக நடிகர்களின் கெட்டப் போட்டு வந்து கொண்டிருக்கின்றனர்.
அதில் புகழ் காந்தாரா திரைப்படத்தில் காந்தாரா கடவுளின் வேஷத்தை போட்டுக்கொண்டு வந்து செட்டில் அனைவரையும் மிரட்டி இருக்கிறார். ரசிகர்கள் பலருக்கும் இது புகழ்தானா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

நான்காவது சீசன் தொடக்கம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதனால்யே தற்போது நான்காவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் அடுத்ததாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கி விடுகிறது. அந்த வகையில் தற்போது நான்காவது சீசன் பிரம்மாண்டமாக பல புது கோமாளிகளோடு தொடங்கப்பட்டிருக்கிறது.

புதிய குக்கள்
ஏற்கனவே பழைய கோமாளிகளாக இருந்தால் புகழ், சுனிதா, குரோஸி, மணிமேகலை ஆகியோர் உடன் ஜி பி முத்து, சிங்கப்பூர் தீபன், மௌனராகம் சீரியல் கதாநாயகி ரவீனா, ஓட்டேரி சிவா, மோனிஷா, சில்மிஷம் சிவா போன்ற பலரும் புதிய கோமாளிகளாக அறிமுகமாகி இருக்கின்றனர். ஏற்கனவே இதுவரைக்கும் இருந்த சிவாங்கி முதல் முறையாக இந்த சீசனில் குக்காக மாறி இருக்கிறார். இந்த நிலையில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட கலக்கப்போவது யாரு பாலா இடம்பெறவில்லை.

இந்த வாரம் சேலஞ்ச்
இந்த நிலையில் சீசன் தொடங்கி ஒரு சில வாரங்கள் முடிவடைந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஹன்சிகா சிறப்பு விருந்தினராக வந்திருக்க அவரோடு ஆட்டம் பாட்டம் போட்டு கொண்டாடி மகிழ்ந்த போட்டியாளர்களுக்கு பிறகு இந்த வாரம் குச்சி சிப்ஸ் சேலஞ்ச் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை பார்த்து போட்டியாளர்களும் குக்களும் கொண்டாடி சந்தோஷத்தில் துள்ளுகின்றனர். பிறகு அனைவரும் தனித்தனியாக தங்களுடைய வேலையை தொடங்குகின்றனர்.

சிலிர்க்க வைத்த காந்தாரா வேடம்
குக் வித் கோமாளி நான்காவது சீசனில் வாரத்தில், திரை உலகை கலக்கும் நட்சத்திரங்களாக வலம் வர இருக்கும் கோமாளிகளின் கெட்டப் ரவுண்ட் என்று இந்த வாரம் தொடங்கி இருக்கின்றனர். அதில் கோமாளிகள் நடிகர்களின் கெட்டப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். குரோஷி ரோலக்ஸ் கெட்டப்பில் வந்து மிரட்ட அதைத் தொடர்ந்து இன்று புகழ் காந்தாரா கெட்டப்பில் வந்து மிரட்டி இருக்கிறார். புகழ் காந்தாரா திரைப்படத்தை கண் முன்னே காட்டி விட்டார் என்று ரசிகர்கள் பலர் இந்த பிரமோவிற்கு கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஒரு நிமிடம் இந்த பிரமோவை பார்த்து மெய் சிலிர்த்து விட்டோம். உடம்பெல்லாம் நடுங்கி விட்டது என்றெல்லாம் தொடர்ந்து பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் பலர் இந்த பிரமோவை திரும்பத் திரும்ப பார்த்து வந்ததாகவும் கூறி வருகிறார்கள்.

புகழுக்கே புகழ்
புகழுக்கு முதல் சீசனில் மட்டும் அதிகமான ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வந்த நிலையில் அதற்கு பிறகு அவர் காமெடி என்கிற பெயரில் க்ரீன்ஞ் செய்து வருகிறார். என்றெல்லாம் அவரைப் பற்றி அதிகமானோர் கலாய்த்து வந்திருந்தனர். இந்த நிலையில் இந்த சீசனிலும் அவரே தொடர்கிறார் என்ற போது பலர் அவரை பற்றி கலாய்த்து வந்த நிலையில் இன்று போட்ட வேடம் மற்றும் நடிப்பு அதிகமான ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது. ஒரு கலைஞன் தன்னை எவ்வளவு வருத்திக் கொள்கிறானோ அவனே சிறந்த கலைஞன் என புகழைப் பாராட்டி உண்மையாகவே ரொம்ப தத்துரூபமாக இருந்தது என்று பலர் புகழ்ந்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications