CWCயில் இயக்குனர் மாரி செல்வராஜ்.. கண்கலங்கி அழுத செஃப் தாமு.. திடீரென மாற்றப்பட்ட விதிமுறை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இந்த வாரம் நடைபெறுகிறது.
அதற்காக மார்ச் 30ஆம் தேதி ஒளிபரப்பாகும் எபிசோட்டில் முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மாரி செல்வராஜ் கலந்து கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் நிகழ்ச்சியில் பல பிரபலங்களும் கண் கலங்கி அழுத்திருக்கின்றனர்.

பலருடைய மன அழுத்தத்தை குறைக்கும் நிகழ்ச்சி என்று சின்னத்திரையில் பாராட்டுகளை பெற்றுக் கொண்டிருக்கும் குக் வித் கோமாளி சீசன் 4 இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் இந்த வாரம் வரும் ஜூலை 30ஆம் தேதி கிராண்ட் பினாலே நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.
அதுவும் இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த வாரம் தொடர்ச்சியாக 5 மணி நேரம் போட்டிகள் நடைபெறும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இந்த கிராண்ட் பினாலே நிகழ்ச்சிக்கு பல பிரபலங்களும் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் பாவாடை தாவணியில் பிரியங்காவும் கையில் பக்கெட் உடன் களம் இறங்கி இருக்க, அதை பார்த்து கோமாளிகள் எல்லாம் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.

அதற்கு வெங்கடேஷ் பட்," உங்களுக்கு எல்லாம் முன்னோடி கோமாளி டா பிரியங்கா" என்று சொல்ல, அதற்கு புகழ் அப்போ வயசான கோமாளியா? என்று கேட்க அங்கே பிரியங்கா பிரச்சனை செய்கிறார். அதைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினராக மாரி செல்வராஜ் கலந்து கொள்கிறார். அவர் பேசுகையில் எனக்கு ரொம்ப பிடிச்ச நிகழ்ச்சி என்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் என்று அவர் உணர்வுபூர்வமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து சிவாங்கி எமோஷனலாக என்னை ஆளாக்கினதற்கு இந்த செட் தான் தேவைப்பட்டு இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அடுத்ததாக செஃப் தாமு, "இப்போ எல்லாம் எங்கே போனாலும் என்னை எல்லாரும் அப்பா அப்பா அப்பா என்று கூப்பிடுறாங்க. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை" என்று கண் கலங்கி அழுகிறார். அதற்கு புகழ் ஆறுதல் கூற சில நிமிடங்கள் அமைதி நிகழ்கிறது.

அதுபோல மோனிஷா பேசிக் கொண்டிருக்கிறார். அவர் "இப்போ இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய பேருக்கு மோனிஷா என்கிறது தெரிகிறது. அது எனக்கு ரொம்ப ஹாப்பி" என்று சொல்ல அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் இடுகின்றனர். இப்படியாக தற்போதைய முதல் பிரமோ வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் ரசிகர்கள் எங்களுக்கு பிடித்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் இங்கேயும் அழுகாச்சு சீன்களை வைத்து விடாதீர்கள் என்று வேண்டுகோளையும் வைத்து வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications