குக் வித் கோமாளியில் முதல் டாப் 5 பைனலிஸ்ட் யார் தெரியுமா? கடைசியில் செஃப் சொன்னதை கவனிச்சீங்களா?
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வார எபிசோட்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் இந்த வாரம் டாப் 5 ஃபைனல் லிஸ்ட் கான முதல் போட்டியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.
அதில் சிவாங்கி தான் முதல் ஆளாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இது குறித்து அதிகமான கருத்துக்கள் குவிந்து வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்ததாக இந்த நிகழ்ச்சிக்கு தான் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலகலப்பாக கோமாளிகள் மற்றும் குக்குகள் செய்யும் சேட்டைகளை பார்ப்பதற்காகவே பலர் இந்த நிகழ்ச்சியை பார்க்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஷிவாங்கி தான் இந்த சீசன் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். காரணம் ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி நேரத்தில் எதிர்பாராத விதமாக டைட்டில் வின்னர் அறிவிக்கப்பட்டது போலவே இந்த நிகழ்ச்சியிலும் இருக்க போகிறது என்பது ரசிகர்களின் ஆழமான கருத்தாக இருக்கிறது.

ஆனால் சிவாங்கி எனக்காக யாரும் இங்கே எந்த சலுகைகளும் செய்யவில்லை. நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மணிக்கணக்கில் சமையல் கற்றுக் கொண்டுதான் வருகிறேன் என்று விளக்கமும் கொடுத்திருந்தார். ஆனாலும் ரசிகர்கள் இதே விவாதத்தை தொடர்ந்து கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் சிவாங்கி தான் முதல் டாப் 5 கண்டஸ்டண்டாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் இதுகுறித்து செஃப் வெங்கடேஷ் பட் இனி நீ சூப்பர் சிங்கர் சிவாங்கி கிடையாது. குக் வித் கோமாளி செஃப் சிவாங்கி என்று கூறி இருக்கிறார். இந்த ப்ரோமோவிற்கு அதிகமான ரசிகர்கள் இதுதான் நடக்கும் என்று எங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications