இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்..!? சொதப்பிய சமையலை முகத்துக்கு நேராக திட்டிய செஃப்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் யார் வெளியேற இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னை: விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 4 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் மார்ச் 11 மற்றும் 12ஆம் தேதிக்கான ஆறாவது ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.
அதில் டேஞ்சர் சோனில் காளையன், விஜே விஷால், விசித்ரா மூவரும் இருக்கின்றனர்.

புதிய கோமாளிகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகின்ற நிலையில், கடந்த வாரத்தில் முதல் போட்டியாளராக கிஷோர் வெளியேற்றப்பட்டார். இந்த சீசனில் பல போட்டியாளர்கள் புதியதாக அறிமுகமானார்கள். அவர்களின் ஜி.பி முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், சின்னத்திரை நடிகை ரவீனா டாடா, சுனிதா, மோனிஷா, மணிமேகலை போன்றோர் கோமாளிகளாக கலந்து கொண்டிருக்கின்றனர்.

புதிய குக்குகள்
அதுமட்டுமல்லாமல் இந்த சீசனில் குக்குகளாக ஷெரின், விசித்திரா, அஜித் பட நடிகரான ராஜா ஐயப்பா, பாக்கியலட்சுமி சீரியல் எழில் கேரக்டரில் நடிக்கும் விஜே விஷால், காளையன், மைம் கோபி, நாய் சேகர் இயக்குனர் கிஷோர் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டு இருக்கின்றனர். இதுவரைக்கும் கோமாளியாக கலந்து கொண்ட சிவாங்கி இந்த சீசனில் குக்காக அறிமுகம் ஆகி இருக்கிறார்.

டேஞ்சர் சோனில் மூவர்
இந்த நிலையில் இந்த வாரத்தில் ஏற்கனவே எலிமினேஷன் இருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது. இதில் டேஞ்சர் சோனில் விஜே விஷால், காளையன், விசித்ரா மூவரும் இருக்கின்றனர். இவர்கள் மூவரும் செய்த சமையல் இந்த எலிமினேஷன் ரவுண்டுக்கான சமையலாக இல்லை. இந்த டிஷ் ரொம்ப சிம்பிளாக இருக்கிறது என்று செப் தாமு கூறுகிறார். அதனை மூவரும் ஏற்றுக் கொள்ளுகின்றனர். அதில் காளையன் கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு வறுவல் செய்து இருக்கிறார். அவரைப் போல விஜே விஷால் மிலாட் என்கிற டிஸ்ஸில் இருந்து இன்ஸ்பயர் ஆகி செய்யப்பட்டதது என்று விளக்கம் கொடுக்கிறார். அதற்கு வெங்கடேஷ் பட் இதற்கு மேல் பண்ணும் போது வேற ஏதாவது கொஞ்சம் எஃபெக்ட் போடுற மாதிரி பண்ணுங்க என்று அறிவுரை கூறுகிறார்.

இந்த வார வெளியேற்றம்
அடுத்ததாக விசித்ராவின் சமையல் உருளை மீல்மேக்கர் புலாவ் இது இந்தியனில் வருகிறதா? அல்லது சவுத்தில் இருந்து வருகிறதா? என்று கேட்க, புலாவ் வந்து சவுத்தில் இல்ல ஆப்கானிஸ்திலிருந்து வந்தது தான் புலாவ் என்று வெங்கடேஷ் பட் விளக்கம் கொடுக்க, இப்ப சொல்லுங்க இது புலாவா? இல்ல பிரியாணியா? என்று செஃப் கேட்கிறார். இந்த பிரமோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இந்த வாரத்தில் காளையன் வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த வாரத்தோடு காளையனின் பயணம் குக் வித் கோமாளியில் முடிவுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications