இதுவரைக்கும் இப்படி நடந்ததே இல்லை.. குக் வித் கோமாளியில் நடந்த அவமானம்.. பொங்கிய போட்டியாளர்

தனக்கு இதுவரைக்கும் இப்படி ஒரு அவமானம் நடந்ததே இல்லை என புகழ் வருத்தத்தோடு கூறி இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் மார்ச் 18 மற்றும் 19ஆம் தேதிக்கான முதல் பிரமோ வெளியாகி இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியின் நான்கு சீசனாக கோமாளியாக கலந்து வரும் புகழ் தற்போது பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறார்.

புகழின் குக்காக இந்த வாரம் இருக்கும் ஸ்ருஷ்டி புகழுக்கு சமையல் தெரியவில்லை என்று குறை கூறியிருக்கிறார்.

நகைச்சுவை நிகழ்ச்சி

நகைச்சுவை நிகழ்ச்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கான ஒவ்வொரு முறையும் ப்ரோமோ வெளியாகும் போதும் இந்த நிகழ்ச்சிக்கான தங்களுடைய ஆதரவையும், கருத்துக்களாகவும் லைக்குகளாகவும் கொடுத்து வருகின்றனர். விஜய் டிவியில் 2019 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ஒரு நகைச்சுவை சமையல் போட்டி ஆக இந்த நிகழ்ச்சி இருந்து வருகிறது.

வெற்றியாளர்கள்

வெற்றியாளர்கள்

இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவியின் நகைச்சுவை நடிகர்கள் குக்குகளோடு சேர்ந்து சமைத்து குக்குகளுக்கு உதவியாக இல்லாமல் கோமாளித்தனங்கள் செய்து பார்வையாளர்களை சிரிக்க வைப்பதற்காக சமையலுக்கு நடுவில் கோமாளிகள் செய்யும் சுட்டித்தனங்கள் மற்றும் நடுவர்கள் கொடுக்கும் தொல்லைகளும் இணைந்து எப்படி குக்குகள் சிறப்பாக சமைக்கிறார்கள் என்பது தான் இந்த நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்கு காரணம். முதல் சீசனில் வனிதா விஜயகுமார் வெற்றியாளராகவும், இரண்டாவது சீசனில் கனி வெற்றியாளராகவும் மூன்றாவது சீசனில் ஸ்ருதிஹா வெற்றியாளராகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்த சீசனின் வெற்றியாளர்

இந்த சீசனின் வெற்றியாளர்

இந்த நிலையில் தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் கண்டிப்பாக சிவாங்கி தான் வெற்றியாளர் என்று ரசிகர்கள் அடித்துக் கூறி வருகிறார்கள். இதுவரைக்கும் மூன்று சீசனங்களில் கோமாளியாக இருந்த சிவாங்கி இந்த சீசனில் குக்காக மாறி இருக்கிறார். அதுவும் ஆரம்பத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சிக்காக ஸ்பெஷல் ஆக இவர் சமையல் கற்றுக் கொண்டு வந்து இங்கே சிறப்பாக செய்து காட்டி பல பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

இப்படி நடந்ததே இல்லை

இப்படி நடந்ததே இல்லை

இந்த நிலையில் மூன்று சீசன்களாக கோமாளியாக இருந்த புகழ் இந்த சீசனும் கோமாளியாகவே இருந்து வருகிறார். இந்த நிலையில் இந்த வாரத்தில் புகழின் ஜோடியாக ஸ்ருஷ்டி இருந்து வருகிறார். அவர் தற்போது இந்த வாரத்தில் புரோட்டா டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் யார் இம்யூனிட்டி டாஸ்க் வெல்ல போகிறார்கள் என்று எதிர்பார்ப்பில் இருக்கும் நிலையில் புகழை பற்றி சமையல் தெரியாது என்று ஸ்ருஷ்டி திட்ட அதை கேட்டு பதறிப் போய் புகழ் புலம்பி கொண்டிருக்கிறார். அதை கேட்டு சிவாங்கி இதுவரைக்கும் மூன்று சீசன்களில் யாரும் புகழை பார்த்து இந்த வார்த்தை கூறியது கிடையாது. ஆனால் இந்த சீசனில் இப்படி ஸ்ருஷ்டி சொல்லிட்டாரே என்று வருத்தத்தை பகிர்ந்து இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+