அவதூறாக பேசியதால் CWCயில் திடீரென போராட்டம் செய்த கோமாளிகள்.. பிரச்சனைக்கு காரணம் இவரா?
புகழை அவதூறாக பேசியதால் சக கோமாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டம் செய்து இருக்கின்றனர்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் மார்ச் 18 மற்றும் 19 ஆம் நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இந்த பிரமோவில் கோமாளிகள் அனைவரும் குக்குகளுக்கு எதிராக ஒன்று சேர்ந்து போராட்டம் செய்து இருக்கின்றனர்.
கோமாளிகளை அதுவும் குறிப்பாக புகழை அவமானம் செய்து விட்டார்கள் என்று கோமாளிகள் குற்றம் சாட்டி இருக்கின்றனர்.

நான்காவது சீசன்
சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்கலில் முதலிடம் வகிக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரைக்கும் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளை விட சற்று வித்தியாசமான நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் அதிகமான சுட்டித்தனங்கள் நிறைந்த ஒருவரை கோமாளி என்கிற பெயரில் வைத்துக்கொண்டு ஒரு குக் சமைக்கும் சமையல் நிகழ்ச்சியாக இது இருந்து வருகிறது. முதல் சீசனில் கிடைத்த வெற்றி, வரவேற்பு காரணமாகவே தற்போது மூன்று சீசன்கள் முடிவடைந்து நான்காவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

கோமாளிகள்
இதில் பழைய கோமாளிகளாக இருந்த புகழ், சுனிதா, குரோஷி, மணிமேகலை ஆகிய நான்கு பேர் மட்டுமே இந்த சீசனில் தொடர்ந்து வந்தனர். அவர்களில் திடீரென மணிமேகலை இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டார். ஏற்கனவே அதிகமாக ரசிக்கப்பட்ட பாலா இந்த சீசனில் வரவில்லை. சிவாங்கியும் குக்காக இருந்து கோமாளியாக தற்போதைய சீசனில் மாறி இருக்கிறார். இந்த நிலையில் புதிய கோமாளியாக ஜி பி முத்து, சிங்கப்பூர் தீபன், மௌனராகம் சீரியல் கதாநாயகி ரவீனா, சில்மிஷம் சிவா, மோனிஷா போன்ற பலர் அறிமுகமாகி இருக்கின்றனர்.

புதிய குக்குகள்
இந்த நிலையில் குக்காக இந்த சீசனில் ஸ்ருஷ்டி டாங்கே, வலிமை படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்த ராஜ் ஐயப்பன், பிக் பாஸ் சீசன் 3 பிரபலம் ஷெரின்,ரஜினியுடன் முத்து படித்தில் நடித்து தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நடித்து வரும் விசித்ரா, நாய் சேகர் படம் இயக்குனர் கிஷோர், பாக்கியலட்சுமி சீரியல் எழில் கேரக்டரில் நடிக்கும் விஜே விஷால், மதுரை காளையன், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆண்ட்ரியா, மைம் எனும் கலையில் கோல்ட் மெடலிஸ்ட் ஆக இருக்கும் கோபி மற்றும் சிவாங்கி ஆகிய 10 பேர் குக்காக இருந்து வருகின்றனர். இதில் நாய் சேகர் பட கிஷோர் மற்றும் காளையன் ஆகிய இரண்டு குக்குகள் வெளியேறி இருக்கின்றனர்.

திட்டிய குக்
இந்த நிலையில் இந்த வாரத்திற்கான இரண்டாவது பிரமோவில் புகழ் மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே இருவரும் ஒன்றாக சமையல் செய்கின்றனர். ஸ்ருஷ்டி டாங்கேவின் கோமாளியாக புகழ் இருக்கிறார். அவர் அருகில் இருந்த டேபிளில் விஷால் மற்றும் சுனிதா இருவரும் சமையல் செய்து கொண்டிருக்கும் போது சுனிதா மாவு பிசைந்த அழகை பார்த்து புகழை ஸ்ருஷ்டி திட்டுகிறார். முதல் முறையாக விஷால் மற்றும் சுனிதா ஜோடியாக சமையல் செய்கின்றனர். இதனை ரசிகர்கள் கமாண்டுகளில் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் ஸ்ருஷ்டி புகழை திட்டியதால் புகழ் ஒரு கோமாளியை அவதூறாக பேசியதால் போராடுவோம் போராடுவோம் என்று கத்திக்கொண்டு சக கோமாளிகளையும் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

கோமாளிகளின் வெளிநடப்பு
புகழுக்கு ஆதரவாக மற்ற கோமாளிகள் அனைவரும் போராடுவோம் போராடுவோம் என்று கூறிக்கொண்டு வெளிநடப்பு செய்ய இருக்கின்றனர். தற்போது வெளியாகி இருக்கும் இந்த பிரமோ இந்த வாரம் நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பை கூட்டி இருக்கிறது. அதே நேரத்தில் கடந்த வாரத்தில் காளையன் திடீர் வெளியேற்றம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் கொடுத்திருந்தது. அவர் புகழ் மற்றும் ஜிபி முத்துவுடன் செய்யும் சேட்டைகள் ரசிகர்கள் ரசிக்கும்படி இருந்ததாகவும், பலர் கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர். ஜி பி முத்து மற்றும் புகழை அடிக்கடி அடித்துக் கொண்டும் துரத்திக் கொண்டும் காளையன் இருந்தாலும் சூட்டிங் ஸ்பாட்டில் ஜாலிக்காக தான் அப்படி செய்து கொண்டிருப்பாராம். அப்படி செய்தாலும் பிறகு அவர்களிடம் இப்படியெல்லாம் செய்தால் உங்களுக்கு ஓகே தானே என்று காளையன் அனுமதி வாங்கி இருந்ததாகவும் போட்டியாளர்கள் கூறியிருக்கின்றனர். இந்த நிலையில் இந்த வாரத்தில் யாரு சிறப்பாக சமையல் செய்ய இருக்கிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications