CWC நிகழ்ச்சியை விட்டு இந்த வாரம் வெளியேறும் நபர்? இப்படி ஆவது இதுதான் முதல் முறை.. புகழ் உருக்கம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 காண மார்ச் 25 மற்றும் 26 ஆம் தேதிக்கான 2வது பிரமோ வெளியாகி இருக்கிறது.
தன்னை வேண்டாம் என்று கூறிய ஸ்ருஷ்டியிடம் புகழ் உருக்கமாக பேசியிருக்கிறார்.
இந்த சீசனில் முதல் முறையாக சிவாங்கி மற்றும் புகழ் இருவரும் ஒரே அணியாக மாறி இருக்கின்றனர்.

நகைச்சுவை நிகழ்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கான ஒவ்வொரு முறையும் ப்ரோமோ வெளியாகும் போதும் இந்த நிகழ்ச்சிக்கான தங்களுடைய ஆதரவையும், கருத்துக்களாகவும் லைக்குகளாகவும் கொடுத்து வருகின்றனர். விஜய் டிவியில் 2019 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ஒரு நகைச்சுவை சமையல் போட்டி ஆக இந்த நிகழ்ச்சி இருந்து வருகிறது.

வெற்றியாளர்கள்
இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவியின் நகைச்சுவை நடிகர்கள் குக்குகளோடு சேர்ந்து சமைத்து குக்குகளுக்கு உதவியாக இல்லாமல் கோமாளித்தனங்கள் செய்து பார்வையாளர்களை சிரிக்க வைப்பதற்காக சமையலுக்கு நடுவில் கோமாளிகள் செய்யும் சுட்டித்தனங்கள் மற்றும் நடுவர்கள் கொடுக்கும் தொல்லைகளும் இணைந்து எப்படி குக்குகள் சிறப்பாக சமைக்கிறார்கள் என்பது தான் இந்த நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்கு காரணம். முதல் சீசனில் வனிதா விஜயகுமார் வெற்றியாளராகவும், இரண்டாவது சீசனில் கனி வெற்றியாளராகவும் மூன்றாவது சீசனில் ஸ்ருதிஹா வெற்றியாளராகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்த சீசனின் வெற்றியாளர்
இந்த நிலையில் தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் கண்டிப்பாக சிவாங்கி தான் வெற்றியாளர் என்று ரசிகர்கள் அடித்துக் கூறி வருகிறார்கள். இதுவரைக்கும் மூன்று சீசனங்களில் கோமாளியாக இருந்த சிவாங்கி இந்த சீசனில் குக்காக மாறி இருக்கிறார். அதுவும் ஆரம்பத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சிக்காக ஸ்பெஷல் ஆக இவர் சமையல் கற்றுக் கொண்டு வந்து இங்கே சிறப்பாக செய்து காட்டி பல பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

மூன்றாவது எலிமினேஷன்
இந்த சீசனில் இதுவரைக்கும் குரோஸி முதல் எலிமினேஷன் ஆகி இருந்தார். அவரைத் தொடர்ந்து மணிமேகலை தானாக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போகிறேன் என்று அறிக்கை வெளியிட்டு வெளியேறியிருந்தார். அவரை தொடர்ந்து காளையன் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் மூன்றாவது எலிமினேஷன் யார் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் அதிகமாக இந்த வாரம் ராஜ் ஐயப்பா வெளியாவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனாலும் கடைசி நேரத்தில் என்ன வேணாலும் நடக்கலாம் என்பது இங்கே தெரிந்ததுதான்.

புகழின் வருத்தம்
இந்த நிலையில் இந்த வாரம் வெளியான ப்ரோமோவில் இந்த சீசனில் முதல் முறையாக சிவாங்கி மற்றும் புகழ் இருவரும் ஒரே அணியாக சேர்ந்திருக்கின்றனர். ரசிகர்கள் இந்த சீசனின் ஆரம்பத்திலிருந்து எதிர்பார்த்தது இதுதான். தற்போது நிறைவேறி இருக்கிறது. இந்த நிலையில் புகழ் தனக்கு வேண்டாம் என்று ஸ்ருஷ்டி கூறியதால் புகழ் இது வரலாற்றிலேயே இல்லாத ஒரு வார்த்தையாக இருக்கிறது. இவர் இதற்கு முன்பு இந்த நிகழ்ச்சியை பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். என்னை வேண்டாம் என்று சொன்னவர் இவராகத்தான் இருக்க முடியும். எல்லோரும் நான் வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் ஸ்ருஷ்டி மட்டும் இப்படி கூறிவிட்டார் என்று வேதனையோடு பேசிக் கொண்டிருக்கிறார். தற்போது இந்த கலகலப்பான ப்ரோமோ வைரல் ஆகி வருகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications