CWCஇல் செஃப் வெங்கடேஷ் பட் சொன்ன வார்த்தை.. கதறி அழுத புகழ்.. கண்கலங்கிய போட்டியாளர்கள்
சென்னை: குக் வித் கோமாளி இந்த வார நிகழ்ச்சியில் புகழ் செஃப் வெங்கடேஷ் பட் சொன்ன வார்த்தைக்காக கதறி அழுகிறார்.
இந்த வாரம் புகழ் தெருக்கூத்து கலைஞர்களின் வேடம் அணிந்து இந்த நிகழ்ச்சியில் பலரையும் கண்கலங்க வைத்திருக்கின்றார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது அதிகமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியின் சீசன் 4 ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கலந்துகொண்ட பல பிரபலங்கள் அடுத்து வெள்ளித்திரையில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ஒருவர் தான் புகழ்.
புகழ் ஆரம்பத்தில் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தாலும் அவருக்கு தகுதியான பெயரும் புகழும் கிடைக்காமல் இருந்து வந்தது. கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் அவர் பெண் வேடமிட்டு பலரையும் மகிழ்வித்து இருக்கிறார். ஆனால் அது அவர்தான் புகழ் என்று யாருக்கும் தெரியாது அந்த அளவில்தான் புகழுடைய வளர்ச்சி இருந்தது.
வாய்ப்புக்காக பல இடங்களில் ஏறி இறங்கிக் கொண்டிருந்த புகழ் விஜய் டிவியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது கார் செட்டில் வேலை பார்த்து அங்கேயே தங்கி கூட பல நாட்கள் ஆடிஷனில் கலந்து கொண்டிருக்கிறார் அப்படி கஷ்டப்பட்டதால் தான் தற்போது அவர் வெள்ளி திரையில் ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் புகழுக்கு ஒரு திருப்பு முனையாக தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அமைந்தது. இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய முகத்தை மொத்த உலகத்திற்குமே காட்டி புகழ் ரசிகர்களின் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து விட்டார். இவருடைய காமெடி மற்றும் ஜாலியான பேச்சு பலரையும் கவர்ந்திருந்தது. இவர் அடிக்கடி வெங்கடேஷ் பட் மற்றும் செப் தாமு இருவரிடமும் அடிவாங்கிக் கொண்டிருந்தாலும் அதுவே ஜாலியாக எடுத்துக் கொள்வார். அதையே கூட பல நெட்டிசன்கள் கலாய்த்தூள் கொண்டிருக்கின்றனர்
அந்த வகையில் பல நேரங்களில் தன்னுடைய உடலை வருத்தி வேஷம் போட்டு பலரையும் மனம் நெருட வைத்திருக்கிறார். அந்த மாதிரி தான் இந்த வாரத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு தெருக்கூத்து கலைஞராக புகழ் வேடம் அணிந்து வந்திருக்கிறார். அப்போது அவரிடம் நீ சமுதாயத்திற்கு சொல்லும் ஒரு கருத்தாக ஏதாவது செய்ய வேண்டும் என்று வெங்கடேஷ் பட் கூறி இருக்கிறார்.

ஒரு தெருக்கூத்து கலைஞர் தெருவில் ஆடி பலரையும் சிரிக்க வைத்து விட்டு வீட்டிற்கு வரும்போது அவருடைய மனைவி யை ஒருவர் கொலை செய்துவிட்டார். அதை பார்த்த தெருக்கூத்து கலைஞர் எப்படி கதறி அழுவார் என்று அவருக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதை தத்துரூபமாக நடித்துக் காட்டி, பார்த்துக் கொண்டிருக்கும் சக போட்டியாளர்களையும் புகழ் கண் கலங்க வைத்து விட்டார். தற்போது வீடியோஸ் வெளியாகி இருக்கிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications