CWCஇல் உணவை சாப்பிட்டு மயங்கி விழுந்த சிறுவன்.. அதிர்ச்சியில் நடுவர்கள்.. வெளியான வீடியோ
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் சிறப்பு விருந்தினர்களாக சில குழந்தைகள் கலந்து கொண்டு இருக்கின்றனர்.
அந்த நேரத்தில் அங்கே சமைத்த ஒரு உணவை சாப்பிட்ட குழந்தை வாந்தி எடுத்தபடி மயக்கம் போட்டு விழுந்து நடித்து இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் கலகலப்புக்கும், மகிழ்ச்சிக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கும் நிலையில் இந்த வாரம் நடந்த நிகழ்வு பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கின்றது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சில பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள். அந்த வகையில் தான் இந்த வாரமும் நடிகர் சித்தார்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார். அவரோடு சில குழந்தைகளும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே கோமாளிகள் குழந்தை தனமாகத்தான் அந்த செட்டுக்குள் சேட்டை செய்து கொண்டிருக்கின்றனர். இப்போது அவர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் குழந்தைகளும் சேட்டை செய்து அங்கிருக்கும் குக்குகளை திணற விடுகிறார்கள். குக்கள் மட்டுமல்லாமல் நடுவர்களும் இப்போது பயந்து போய் இருக்கிறார்கள்.
அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கான இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் குழந்தைகள் அங்கு சமைக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றனர். அப்போது ஒரு சிறுவன் இது என்ன சாப்பாடு என்று கேட்க இது வெஜிடேரியன் என்று சொல்ல இது எனக்கு பிடிக்காது என்று கூறுகிறது.

ஆனால் வெஜிடேரியன் நீ சாப்பிட மாட்டியா என்று கேட்டபடி வெங்கடேஷ் பட் அந்த சிறுவனுக்கு கேரட் கேபேஜ் ஊட்டி விடுகிறார். அப்போது அவருடைய முகம் மாறுகிறது. பின்பு அதை வாந்தி எடுக்கப்பட்டபடியே மயக்கம் போட்டு விழுகிறார். அனைவரும் பயந்து போய்விட கடைசியில் அந்த சிறுவர் எல்லோரையும் ஏமாற்றியபடி சிரித்துக் கொண்டிருக்கிறான். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் புகழ் தங்கதுரைக்கே டப் கொடுக்கும் மாதிரி இந்த சிறுவன் நடித்து அனைவரையும் பயப்பட வைத்து விட்டானே என்று பாராட்டி வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் இது உண்மையாக இருக்குமோ என்று முதலில் பயந்துவிட்டோம். ஆனால் இப்படி ஆகிவிட்டதே என்று தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications