சிவாங்கிக்காக தான் விஷால் வெளியேற்றம்..!? உண்மையை உளறிய மோனிஷா.. கருத்து கூறும் பிரபலங்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் விஜே விஷால் எலிமினேஷன் செய்யப்பட்டு இருக்கிறார்.
விஜே விஷால் வெளியேற்றம் பற்றி பல்வேறு செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
இந்த நிலையில் விஜய் விஷால் வெளியேற்றம் குறித்து அவரோடு கோமாளியாக இருந்த மோனிஷா சில தகவல்களை கூறி இருக்கிறார்.

இதுவரைக்கும் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றமும் டைட்டில் வின்னரும் தான் பெரும் பிரச்சனையை சந்தித்து கொண்டு இருந்து வந்த நிலையில், தற்போது குக் வித் கோமாளியும் அந்த வரிசையில் இடம் பிடித்திருக்கிறது. இந்த வாரம் விஜே விஷால் வெளியேற்றப்பட்டது தான் பட்டார் அதற்கு பிறகு அதிகமான கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் நிலவி வருகிறது. ஏற்கனவே இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே சிவாங்கிக்கு அதிகமான நெகட்டிவ் கமாண்டுகள் குவிந்து வருகிறது.
சிவாங்கி ஏற்கனவே மூன்று சீசன்களாக கோமாளியாக சமையல் செய்ய தெரியாமல் இருந்த நிலையில் இப்போது மட்டும் எப்படி குக்காக மாறி அவரால் சமையல் செய்ய முடியும்? என்றும் சிவாங்கிக்கு மட்டும் இப்படி ஸ்பெஷல் சலுகை கொடுக்கும் போது பலர் இந்த வாய்ப்புக்காக தவம் கிடக்கையில் அவர்களுக்கு கொடுக்கலாமே என்றும் பல்வேறு கருத்துக்கள் குவிந்து வருகிறது.

அது மட்டுமல்லாமல் இந்த சீசன் டைட்டில் வின்னர் சிவாங்கி தான் இதை விஜய் டிவி ஏற்கனவே முடிவு செய்துவிட்டது என்றும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தான் விஜே விஷால் மற்றும் சிவாங்கி இருவரும் கடந்த வாரம் எலிமினேஷனில் இருந்து வந்தனர். அதில் கடைசி நேரத்தில் சிவாங்கி பாதுகாக்கப்பட்டு விஜே விஷால் எலிமினேஷன் செய்யப்பட்டார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் பல்வேறு சர்ச்சை கருத்துக்கள் வலம் வருகிறது. அது மட்டுமல்லாமல் விஜே விஷாலுக்கு கோமாளியாக கடந்த வாரத்தில் மோனிஷா தான் இருந்து வந்தார். அவர் சிவாங்கியின் கெட்டப் போட்டு இருந்தார். அதனாலேயே மோனிஷா சரியாக சமைக்காமல் சொதப்பிவிட்டார் என்றும் பலர் கருத்து கூறி வருகின்றனர்.

இதுகுறித்து மோனிஷா விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் எல்லோரும் கேட்கிற மாதிரி சிவாங்கிக்காக விஷாலை வெளியேற்றம் செய்யவில்லை. என்னால் முடிந்த அளவிற்கு என்னுடைய பங்களிப்பையும் நான் செய்து வந்தேன். எனக்கு தெரிந்ததை நான் அந்த இடத்தில் செய்துதான் வந்தேன். ஆனால் கடைசி நேரத்தில் செஃப் முடிவு நாங்கள் எதிர்பார்த்தபடி இல்லை. இது எங்களுக்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.
மேலும் விஷால் எலிமினேஷனுக்கு என்னை பலரும் குற்றம் சொல்கிறீர்கள். அவர்களுக்கு எல்லாம் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். என்னதான் நான் funஆ இருந்தாலும் யாருக்கும் கோமாளியாக போனாலும் நான் என்னால் முடிந்தவரை உதவி செய்வேன். இதற்கெல்லாம் மேலாக இது வெறும் ஒரு ஷோதான். அதை நீங்கள் எல்லோரும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார். தற்போது இதற்கு அதிகமான கருத்துக்கள் குவிந்து வருகிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications