குக் வித் கோமாளியில் இருந்து விலகுகிறாரா? செஃப் வெங்கடேஷ் பட்.. அந்த போட்டோவை கவனிச்சீங்களா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவுக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து நடுவராக இருக்கும் வெங்கடேஷ் பட் விலகி உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
அதற்கு தகுந்தது போல வெங்கடேஷ் பட் அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். அதனாலேயே இந்த நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு தான் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
அதனாலேயே ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்ச்சி பிக் பாஸை தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு முறையும் குக்குகள் மட்டும் புதியது புதியதாக அறிமுகமாகி கொண்டிருக்கின்றனர். ஆனால் பல கோமாளிகள் ஆரம்பத்தில் இருந்தவர்கள் தான் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். அதுபோல நான்கு சீசன்களாகவே செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு இருவரும் நடுவர்களாக தொடர்கின்றனர்.
இதுவரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி இந்த நான்காவது சீசனின் ஆரம்பத்திலிருந்து அதிகமான சர்ச்சைகளை சந்தித்து கொண்டிருக்கின்றது. ஆரம்பத்தில் மணிமேகலை இந்த நிகழ்ச்சியை விட்டு திடீரென்று விலகினார். ஆனால் அதற்கு என்ன காரணம் என்பது குறித்து அவர் கூறப்படாத நிலையில் அது குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தது.
அதுபோல அதைத் தொடர்ந்து குரோஷி குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு விலகுவது போன்று பதிவு ஒன்றை வெளியிட்டு பிறகு அந்த பதிவை உடனே டெலிட் செய்து விட்டு நான் இந்த நிகழ்ச்சியை விட்டு போகவே மாட்டேன் என்று அடுத்த ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அப்படியாக அடுத்தடுத்த பிரச்சனைகள் வந்து கொண்டிருந்த நிலையில் இந்த சீசனில் சிவாங்கி குக்காக மாறியதும் பெரும் பிரச்சனையாக அமைந்தது.
ஆரம்பத்தில் இருந்தே சிவாங்கி குக்காக இருக்கிறார் என்பது குறித்து பல்வேறு வதந்திகளும் நெகட்டிவ் கருத்துகளும் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறப் போகிறார் என்னும் செய்திகளும் பரவி வருகிறது.
அதற்கு காரணம் தொடர்ச்சியாக வெங்கடேஷ் பட் வெளிநாடுகளில் இருப்பது போன்று புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். தன்னுடைய குடும்பத்தோடு வெளிநாட்டில் இவர் இத்தனை நாட்கள் சுற்றி இருந்தது கிடையாது என்று அதிகமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் பிரபலங்கள் பலர் கூட நாங்கள் உங்களை ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம் என்று வெங்கடேஷ் பட்டை டேக் செய்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருக்கின்றனர்.
இதனால் இவரும் இந்த நிகழ்ச்சியை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் விலகி விட்டாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வருவதால் எப்படி அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவார் என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். இதில் உண்மை என்ன என்பது இன்னும் ஒரு சில எபிசோடுகளில் தெரிந்து விடும்.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications