குக் வித் கோமாளியில் நடப்பது இதுதான்.. இப்படி எல்லாம் பேசாதீங்க! உருக்கமாக பதிவிட்ட சிவாங்கி
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சி பற்றி சிவாங்கி உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
தன்னைப் பற்றி அதிகமான நெகட்டிவ் கருத்துக்கள் வரும் நிலையில் அதற்கு நீண்ட விளக்கத்தை சிவாங்கி அதில் கூறி இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் தான் சிறப்பை காட்டுவதற்காக 7 மணி நேரம் பயிற்சி எடுப்பதாக சிவாங்கி கூறி இருக்கிறார்.

இந்த வார வெளியேற்றம்:விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் எதிர்பாராத விதமாக கடைசி நேரத்தில் நேற்றைய எபிசோட்டில் விஜே விஷால் வெளியேற்றப்பட்டார். இது சமூக வலைதளத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. ஏற்கனவே ஒவ்வொரு முறையும் சிவாங்கி பாராட்டப்படுவதை பார்த்து பொறுத்துக் கொள்ளாத நெட்டிசன்கள் சிவாங்கி தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் அதை பிக்ஸ் செய்து விட்டார்கள். அதனால் தான் இப்படி பாராட்டி தள்ளுகிறார்கள். என்றெல்லாம் கருத்து தெரிவித்து வந்தனர்.

சிவாங்கியின் பதிவு: இந்த நிலையில் சிவாங்கி மற்றும் விஜே விஷால் இருவரும் எலிமினேஷனில் இருந்த நிலையில் கடைசி கட்டத்தில் விஜே விஷால் வெளியேற்றப்பட்டது குறித்து இதற்கு சிவாங்கி தான் காரணம் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் சிவாங்கி தன்னுடைய twitter பக்கத்தில் பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
ஏழு மணி நேர உழைப்பு: அதில் சரி நான் எப்படி சமைக்க முடியும் என்பதில் சீசன் தொடங்கியதில் இருந்து நிறைய குழப்பம் இருக்கிறது. இதில் படப்பிடிப்பிற்கு ஒரு நாளைக்கு ஆறு முதல் ஏழு மணி வரை கற்றுக் கொள்வதற்காக நான் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன். நான் மட்டும் இல்லாமல் அங்கே சமையல் செய்பவர்கள் பலரும் எங்களில் சிறந்ததை காட்டுவதற்காக தினசரி வழக்கத்தில் இருந்து பல தியாகங்கள் செய்கின்றனர்.

உழைப்பை குறைக்காதீர்கள்:மேலும் நான் மட்டுமல்ல கோமாளிகளும் தங்கள் கெட்டப்பிற்காக நிறைய தயார் செய்கிறார்கள். உங்கள் அனைவரையும் மகிழ்விக்க எங்களால் முடிந்ததை வழங்குகிறோம். நாங்கள் மிகவும் கடினமாக உழைக்கிறோம். நமது பதற்றமும் வேலையும் பார்த்துக் கொள்ள வேண்டும் நிகழ்ச்சியை அப்படியே பார்த்து மகிழுங்கள். கடின உழைப்பை குறைப்பது மிகவும் எளிது.
வாழ்க்கை தத்துவம்: எனது கடின உழைப்பு உட்பட, நாள் நன்றாக இருந்தால் எனது உணவு நன்றாக வரும். கடின உழைப்பு இருந்தபோதிலும், அது எனது நாள் இல்லை என்றால் அது எனக்கானது அல்ல. எளிய வாழ்க்கை தத்துவம். நான் ஆராய்ந்து ரசித்து வந்துள்ளேன் என்று நீண்ட விளக்கம் கொடுத்திருக்கும் சிவாங்கிக்கு ரசிகர்கள் பலர் ஆறுதல் கூறி வருகின்றனர். ஆனாலும் சில நெட்டிசன்கள் தியாகம் என்ன? சம்பளம் வாங்கும் வேலை இல்லையா? என்று கலாய்த்து கொண்டிருக்கிறார்கள்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications