இந்த வாரம் CWCயில் இருந்து வெளியேறும் பிரபலம்? இந்த வாரமும் அதே தானா? அப்போ வின்னர் சிவாங்கியா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப் போகும் நபர் யார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த வார அடிப்படையில் சிவாங்கி மற்றும் விஜே விஷால் இருவரும் டேஞ்சர் சோனில் இருந்த நிலையில் கடைசி நேரத்தில் எதிர்பாராத மாற்றம் நடந்திருக்கிறது.

எதிர்பாராத மாற்றங்கள்: விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வது போலத்தான் அடுத்தடுத்து நடந்து விடுகிறது. இவர் தான் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கும் தருணங்கள் எல்லாம் பல நேரங்களில் ட்விஸ்ட் கொடுத்து மாறி விடுகிறது. அந்த மாதிரி தற்போதைய இந்த வாரத்தில் கூட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த வார எலிமினேஷன்: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்த பல போட்டியாளர்கள் இப்போது இல்லை. இந்த நிலையில் இந்த வாரத்தில் சிவாங்கி மற்றும் விஜே விஷால் இருவரும் டேஞ்சரஸ் ஷோனில் இருக்கின்றனர் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் விஜே விஷால் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேஷன் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே சிவாங்கி தான் இந்த சீசன் டைட்டில் வின்னர் என்ற தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

ஒருவேளை இருக்குமோ: இந்த நிலையில் சிவாங்கி இருந்தால்தான் கன்டென்ட் கிடைக்கும் என்று நினைத்து இருக்குமோ விஜய் டிவி? அதனால் தான் சிவாங்கியை சேவ் செய்து விட்டு விஜே விஷாலை வெளியேற்றி விட்டார்கள் என்று ரசிகர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே இந்த வாரத்தில் கோமாளிகள் குக்குகளின் வேஷமிட்டு கலக்கி கொண்டிருக்கின்றனர்.

ரசிகர்களின் வருத்தம்: அந்த வகையில் சிவாங்கியின் கெட்டப்பில் மோனிஷா களம் இறங்கி நிகழ்ச்சியில் சுவாரசியமாக கலகலப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், விஜே விஷால் வெளியேறுகிறார் என்ற செய்தி அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. விஜே விஷாலுக்கு பாக்கியலட்சுமி சீரியலில் எழிலாக அதிகமான ரசிகர்களின் மத்தியில் பிரபலம் கிடைத்திருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலமாக இவருக்கு அதிக அளவில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் இவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவது உறுதி என்றால் இதுவரைக்கும் இந்த சீசனில் அனைத்து போட்டியாளர்களும் ஆண்கள் தான் வெளியேற்றப்படுகிறார்கள் என்று ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications