Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் வின்னர் இவர்தானா..? முதல் மூன்று இடங்கள் இவர்களுக்கு தானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சீசன் 4இன் இறுதி நாள் சூட்டிங் நேற்று நடைபெற்றது.

இந்த நிலையில் இந்த சீசனில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த போட்டியாளர்கள் விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

Cook with Comali season 4 the contestants who won this season and took the top three positions

அதே நேரத்தில் சிவாங்கி இந்த இடத்திற்குள் வரவில்லை என்பது அவருடைய ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்திருக்கிறது. அதனால் தான் நேற்று கூட சிவாங்கி சோகமான பதிவு வெளியிட்டாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி கொண்டிருக்கின்றனர்.

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்ததாக ரியாலிட்டி ஷோக்களில் அதிகமான ரசிகர்களின் நன்மதிப்பை பெற்ற ரியாலிட்டி ஷோவாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பு காரணமாகத்தான் தற்போது நான்காவது சீசன் வரைக்கும் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக வந்திருக்கிறது.

Cook with Comali season 4 the contestants who won this season and took the top three positions

இந்த நிகழ்ச்சியில் குக்குகளும்,, கோமாளிகளும் செய்யும் லூட்டிகள் மற்றும் அவர்களை பாடாய்ப்படுத்தும் நடுவர்கள் என அனைவரும் கலகலப்பாக கொண்டு சென்று கொண்டு இருப்பதால் சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் இது ஜாலியாக இருப்பதாகவும் இதுதான் ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருக்கிறது என்றும் பலர் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

எப்போதும் காமெடிக்கு அதிகமாக வரவேற்பு இருக்க தான் செய்கிறது. அந்த மாதிரி தான் டைமிங் காமெடி ஆக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகள் செய்யும் சேட்டைகள் ரசிகர்களால் தொடர்ச்சியாக ரசிக்கப்பட்டு வருவதால் தான் அதிகமான டிஆர்பியும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

Cook with Comali season 4 the contestants who won this season and took the top three positions

இந்த நிலையில் இந்த நான்காவது சீசன் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வந்துவிடும். அதற்கான சூட்டிங் நேற்று இரவு நடந்து முடிந்திருக்கிறது. அதில் டைட்டில் வின்னர் ஆக யாரும் எதிர்பார்க்காத வகையில் மைம் கோபி செலக்ட் செய்யப்பட்டு இருப்பதாகவும், அவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ஸ்ருஷ்டி இருப்பதாகவும் மூன்றாவது இடத்தில் விசித்திரா தேர்வாகி இருப்பதாகவும் தகவல்கள் வேகமாக பரவி வருகிறது.

அதே நேரத்தில் இந்த இடங்களுக்குள் ஆண்ட்ரியன் மற்றும் சிவாங்கி வரவில்லையே என்று சிலர் கேள்வி எழுப்பி கொண்டிருக்கின்றனர். அதுபோல ஆரம்பத்தில் இருந்தே சிவாங்கி இந்த சீசன் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் கூறிக் கொண்டிருந்ததால் சிவாங்கியை செலக்ட் செய்தால் இது டிவி சேனல் பாரபட்சம் பார்ப்பது போன்று இருக்கும் என்று கடைசி நேரத்தில் செலக்சன் மாற்றப்பட்டு விட்டதா என்றும் சிலர் கேள்வி எழுப்பி கொண்டிருக்கின்றனர்.

ஆனால் ஒவ்வொரு முறையும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அந்த வாரம் நடந்த டாஸ்க்களின் அடிப்படையில் தான் தேர்வு நடத்த பட்டது என்று இதில் கலந்துகொண்ட பல போட்டியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதனால் உண்மை நிலவரம் என்ன என்பது அங்கு இருப்பவர்கள் சொல்லி அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த நிலையில் தற்போது வெற்றி பெற்றவர்கள் என்று பரவி வரும் தகவல்கள் உண்மையானதா? இல்லையா? என்று பொறுத்திருந்து பார்த்தால் தான் உண்மை நிலவரம் என்ன என்பது தெரியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+