CWCயில் இருந்து இந்த வாரம் வெளியேறும் நபர் இவர்தானா?.. கடைசி நேரத்தில் இப்படி ஆகிட்டு..!
சென்னை: விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த வாரம் வாழைப்பழம் சம்பந்தப்பட்ட சமையலை போட்டியாளர்கள் செய்ய டாஸ்க் கொடுக்கப்பட்டது.
அதில் அட்வான்டேஜ் டாஸ்க் வெற்றி பெற்றவர்கள் தங்களுக்கு எதிராக டாப் போட்டியாளராக இருப்பவர்களுக்கு டாஸ்க் மாற்றிக் கொடுக்க அனுமதியும் கொடுக்கப்பட்டிருந்தது.
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதிகமான ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சியாக தான் இருக்க முடியும். இந்த நிகழ்ச்சிக்கு அதிகமான பாலோவர்ஸ் இருந்து வருகின்றனர். அதனாலேயே இந்த நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசனில் அடி எடுத்து வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது.

கடந்த ஜனவரி 28 தொடங்கிய இந்த நான்காவது சீசனில் ஆரம்பத்தில் 12 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் கிஷோர், காளையன், ராஜ் ஐயப்பன், விஷால் மற்றும் ஷெரின் என இதுவரை ஐந்து பேர் எலிமினேட் ஆகி இருக்கின்றனர். மணிமேகலை எதற்காக வெளியேறினார் என்பது இப்ப வரைக்கும் தெரியாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்ற ஆர்வம் அனைவரிடமும் இருக்கிறது.
இந்த வாரத்தில் வாழைப்பழம் சம்பந்தமான சமையலை செய்ய டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கும் போது புகழ் உதவியோடு வாழைத்தண்டு சமையல் செய்த சிவாங்கிக்கு புகழ்ச்சி மழைக் கிடைக்கிறது. வாழைதண்டில் ஒரு நார் கூட இல்லையே என்று செஃப் அவரை பாராட்டி இருக்கிறார்.
இந்த நிலையில் இந்த வாரம் கஜேஷ் தான் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது அவருடைய ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. சமீப காலமாகத்தான் அவர் அறிமுகம் ஆகி இருக்கும் நிலையில் அவருக்கு இந்த நிகழ்ச்சியின் மூலமாக பிரபலம் கிடைக்கும் என நினைத்திருந்த நிலையில் ஆரம்பமானது போலவே டக்கென்று வெளியேறிவிட்டாரே என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் நாகேஷின் பேரனாகவும், நடிகர் ஆனந்தபாபுவின் மகனாகவும் இருக்கும் கஜேஷ் சரியான வாய்ப்புகள் இன்னும் அமையாமல் இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்து இருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும் ஆனால் இப்படி ஆகிவிட்டது என்று பலர் பீல் பண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications