குக் வித் கோமாளி சீசன் 4 டைட்டில் வின்னர்.. கடைசி நேர டுவிஸ்ட்.. பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா..?

Subscribe to Oneindia Tamil

சென்னை: குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இன்று இறுதி நாளுக்கான நிகழ்ச்சி நடந்து முடிவடைந்து இருக்கிறது.

இன்றைய நிகழ்ச்சி 5:00 மணி நேரம் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி வந்தது.

அதில் டைட்டில் வின்னர் ஆக மைம் கோபி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதே நேரத்தில் அவருக்கான பரிசுத்தொகை பற்றிய விவரங்களும் தற்போது வெளியாகி இருக்கிறது.

Cook with Comali Season 4 title winner Mime Gopi won the prize money is how

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்ததாக ரியாலிட்டி ஷோக்களில் அதிகமான ரசிகர்களின் நன்மதிப்பை பெற்ற ரியாலிட்டி ஷோவாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பு காரணமாகத்தான் தற்போது நான்காவது சீசன் வரைக்கும் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக வந்திருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் குக்குகளும்,கோமாளிகளும் செய்யும் லூட்டிகள் மற்றும் அவர்களை பாடாய்ப்படுத்தும் நடுவர்கள் என அனைவரும் கலகலப்பாக கொண்டு சென்று கொண்டு இருப்பதால் சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் இது ஜாலியாக இருப்பதாகவும் இதுதான் ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருக்கிறது என்றும் பலர் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

Cook with Comali Season 4 title winner Mime Gopi won the prize money is how

எப்போதும் காமெடிக்கு அதிகமா வரவேற்பு இருக்க தான் செய்கிறது. அந்த மாதிரி தான் டைமிங் காமெடி ஆக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகள் செய்யும் சேட்டைகள் ரசிகர்களால் தொடர்ச்சியாக ரசிக்கப்பட்டு வருவதால் தான் அதிகமான டிஆர்பியும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பைனல் நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் யார் டைட்டில் வின்னர் ஆக வருவார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், இன்று பைனல் நிகழ்ச்சி 5 மணி நேரமாக ஒளிபரப்பாகி வந்தது. அதில் டைட்டில் வின்னராக மைம் கோபி வெற்றி பெற்றிருக்கிறார்.அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடம் ஸ்ருஷ்டிக்கும் மூன்றாவது இடம் விசித்திராவிற்கும் கிடைத்து இருக்கிறது.

அதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வரலாற்றில் முதல் முறையாக நான்காவது சீசனில் தான் ஆண் போட்டியாளர் வெற்றி பெற்று இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரைக்கும் பெண் போட்டியாளர்கள் மட்டும்தான் வின்னராக தொடந்து கொண்டு இருக்கின்றனர்.

Cook with Comali Season 4 title winner Mime Gopi won the prize money is how

அதுபோல வின்னராக செலக்ட் ஆன மைம் கோபிக்கு விஜய் டிவி பிரபலங்கள் மட்டுமல்லாமல் பல திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அதுபோல அதிகமான ரசிகர்கள் மைம் கோபியின் திறமைக்கு கிடைத்த அங்கீகாரம் என்று வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து மைம் கோபிக்கு திரைப்படங்களிலும் அதிகமாக வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று பலர் தங்களுடைய ஆசையை தெரிவித்து வருகிறார்கள்.

அதுபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு என்றும், இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்றவருக்கு 3 லட்சம் ரூபாய் பரிசு என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் வெற்றி பெற்ற கோப்பை மற்றும் பதக்கங்களோடு மைம் கோபி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்," ஜெயிச்சிட்டோம் தம்பிகளா, சப்போர்ட் பண்ண எல்லோருக்கும் நன்றிகள்" என்று புகைப்படம் வெளியிட்டு கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+