குக் வித் கோமாளி சீசன் 4 டைட்டில் வின்னர் இவரா..? நடந்து முடிந்த சூட்டிங்.. எதிர்பாராத மாற்றம்?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது.
அதே நேரத்தில் இந்த வாரத்தில் எதிர்பாராத பல மாற்றங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த சீசனில் டைட்டில் வின்னர் இவராகத்தான் இருக்கும் என்று குறிப்பிட்ட இரண்டு போட்டியாளர்களின் பெயர் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்ததாக ரியாலிட்டி ஷோக்களில் அதிகமான ரசிகர்களின் நன்மதிப்பை பெற்ற ரியாலிட்டி ஷோவாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பு காரணமாகத்தான் தற்போது நான்காவது சீசன் வரைக்கும் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக வந்திருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் குக்குகளும்,, கோமாளிகளும் செய்யும் லூட்டிகள் மற்றும் அவர்களை பாடாய்ப்படுத்தும் நடுவர்கள் என அனைவரும் கலகலப்பாக கொண்டு சென்று கொண்டு இருப்பதால் சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் இது ஜாலியாக இருப்பதாகவும் இதுதான் ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருக்கிறது என்றும் பலர் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.
எப்போதும் காமெடிக்கு அதிகமா வரவேற்பு இருக்க தான் செய்கிறது. அந்த மாதிரி தான் டைமிங் காமெடி ஆக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகள் செய்யும் சேட்டைகள் ரசிகர்களால் தொடர்ச்சியாக ரசிக்கப்பட்டு வருவதால் தான் அதிகமான டிஆர்பியும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தற்போது நான்காவது சீசன் இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவுக்கு வந்துவிடும். இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் கிராண்ட் பினாலே ஷோ ஒளிபரப்பப்படலாம் என்று கூறப்படுகிறதுய இந்த நிலையில் இன்றைய தினம் அதற்கான சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதனால் இன்னும் கொஞ்ச நேரத்தில் யார் டைட்டில் வின்னர் என்பது தெரிந்துவிடும். இந்த நிலையில் சிவாங்கி அல்லது ஆண்ட்ரியன் இவர்களில் யாரோ ஒருவர் தான் டைட்டில் வின்னராக வாய்ப்பிருக்கிறது என்று பரவலாக பேசப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஏற்கனவே சிவாங்கி தான் இந்த சீசன் டைட்டில் வின்னர் என்று அதிகமாக ரசிகர்கள் ஆரம்பத்தில் இருந்து கூறிக் கொண்டிருந்த நிலையில் தற்போது ஏற்கனவே எலிமினேட் ஆகி வெளியே சென்று மீண்டும் வைல்ட் கார்டில் உள்ளே வந்திருக்கும் ஆன்டிரியன் சமையலும் அசத்தலாக இருப்பதால் அவரும் வெற்றி பெற வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஆனாலும் பொறுத்திருந்து பார்த்தால் தான் உண்மை நிலவரம் என்ன என்பது தெரியும்.
-
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications