குக் வித் கோமாளி சீசன் 5யில் இவர்கள் யார் என்று தெரியுமா? இவங்களுக்கு இப்படி ஒரு பின்னணியா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி அன்று தொடங்க இருக்கிறது. இதில் கலந்துகொள்ளும் கோமாளிகள் மற்றும் குக்குகள் யார் என்பது பற்றி ஏற்கனவே ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் குக்காக கலந்து கொள்ளும் அக்ஷய் கமல், ஷாலின் ஜோயா மற்றும் திடியன் யார் என்பது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். இதில் ஒவ்வொரு சீசனிலும் புது புது குக்குகள் கலந்து கொண்டு வருகிறார்கள். அந்த வரிசையில் இந்த முறையும் 10 குக்குகள் கலந்து கொள்வதாக தகவல்கள் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக ப்ரோமோவில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதைத் தொடர்ந்து நடிகர் திடியன் இரண்டாவது வாரத்தில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

அதுபோல இந்த சீசனில் சில புது கோமாளிகளும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அதாவது வழக்கமாக கலந்து கொள்ளும் புகழ், குரோஸி, சுனிதா போன்றோர் இந்த சீசனிலும் தொடர்கின்றனர். அவர்களோடு புதிய கோமாளிகளாக ராமர், ஷப்னம், அன்ஷிதா, kpy வினோத் என்ற புது கோமாளிகளும் இணைந்து இருக்கின்றனர். அதுபோல இந்த சீசனில் போட்டியாளராக ஒரு சில விஜய் டிவி பிரபலங்களும் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களோடு நடிகை ஷாலின் சோயா, அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பூஜா, ஃபுட் ரிவியூவர் இர்பான், பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர் வசந்த் வசி, தொகுப்பாளனி பிரியங்கா தேஷ் பாண்டே, விடிவி கணேஷ் மற்றும் சீரியல் நடிகை சுஜிதா ஆகியோர் போட்டியாளராக களமிறங்கி இருக்கின்றனர். இவர்களில் ரசிகர்களுக்கு பரீட்சயம் இல்லாத சில போட்டியாளர்களும் இருக்கின்றனர்.

அக்ஷய் கமல்: அந்த வகையில் நடிகர் அக்ஷய் கமல் சில சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்திருந்தாலும் அவர் ப்ரோமோவில் வந்ததும் ரசிகர்கள் யார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதாவது அக்ஷய் கமல் டிக்டாக் மூலம் பிரபலமானவர் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த சீரியல் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தற்போது இந்திரா சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் வெளியான N4 திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
ஷாலின் சோயா: கேரளாவை சார்ந்த ஷாலின் சோயா சமீபத்தில் வெளியான கண்ணகி திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் பிரபல யூடியூப்பரான டிடிஎப் வாசனும் இவரும் விதவிதமாக புகைப்படங்களை வெளியிட்டு வருவதால் இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்களா? என்று கேள்வி எழுந்து வருகிறது. ஆனால் அது குறித்து டிடிஎஃப் வாசனும் இவரும் எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு வருகிறார்கள்

திடியன்: நடிகர் திடியன் வேறு யாருமில்லை ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் வெப் சீரியசில் காமெடி நடிகராக நடித்தவர் தான். சமீபத்தில் கூட நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படத்தில் நயன்தாராவுடன் அவருடைய நண்பர் கேரக்டரில் திடியன் நடித்திருந்தார். ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்களை போல இவர் முதல் வாரத்தில் கலந்து கொள்ளாமல் இரண்டாவது வாரத்தில் இருந்து வருவார் என்று கூறப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications